IRCTC Ticket Booking: பண்டிகைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் ஊருக்கு செல்ல நினைப்பவர்கள் அனைவரும் ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய முயற்சிக்கின்றனர். அதிகமானோர் டிக்கெட் புக் செய்வதால், கன்பார்ம் டிக்கெட் கிடைப்பதில் மிகப்பெரிய சிரமம் இருக்கிறது. சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தோடு பண்டிகை கொண்டாட நினைப்பவர்களுக்கு ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் கடுப்பாகிவிடுவார்கள். டிக்கெட் கன்பார்ம் செய்ய வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்றெல்லாம் முயற்சிப்பார்கள். அப்படி முயற்சிப்பவர்களில் ஒருவர் நீங்கள் என்றால், தட்கல் டிக்கெட் மூலம் கன்பார்ம் செய்ய ஒரு வழி இருக்கிறது.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுயவிவரத்தில் மாற்றம்


IRCTC-லிருந்து தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன், உங்கள் சுயவிவரத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதன் நன்மை என்னவென்றால், தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, ​​​​எல்லா விவரங்களையும் நிரப்ப வேண்டியதில்லை. உங்களின் தகவல்கள் அனைத்தும் சுயவிவரத்தில் சரியாக இருந்தால், தட்கல் டிக்கெட் புக்கிங்கின்போது ஈஸியாக இருக்கும் 


மேலும் படிக்க | Amazon, Flipkart, Myntra: தீபாவளிக்கு சிறந்த ஆபர் வழங்கும் தளம் இதுதான்!


டிக்கெட் முன்பதிவு நேரம்


இதற்குப் பிறகு, டிக்கெட் முன்பதிவு நேரம் பற்றிய தகவல்களைச் சேகரிக்கவும். ஏசி தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் வகுப்பு முன்பதிவு காலை 11 மணிக்கும் தொடங்கும். முன்பதிவு தொடங்கும் முன் தளத்தில் உள்நுழைந்து தயாராக இருக்க வேண்டும். 


முதன்மை பட்டியல்


முன்பதிவு தொடங்கியவுடன் புறப்படும் ஊர், செல்லும் ஊர் தொடர்பான விவரங்களை நிரப்பத் தொடங்குங்கள். அதன்பின் நீங்கள் ஏற்கனவே நிரப்பி வைத்திருக்கும் உங்களின் சுயவிவரங்கள் தானாக நிரப்பிக் கொள்ளும். இதன்மூலம் உங்களின் நேரம் மிச்சமாகும். தட்கல் டிக்கெட்டில் நேரம் என்பது மிக மிக முக்கியமானது.  


கட்டண முறை


இறுதியாக, டிக்கெட்டுக்கு பணம் செலுத்துவதற்கான ஆப்சனை பெறுவீர்கள். மற்ற கட்டண முறைகளைத் தவிர்த்து UPI மூலம் பணத்தை செலுத்த முயற்சி செய்யுங்கள். ஏனென்றால், UPI தான் பணம் செலுத்துவதற்கான வேகமான மற்றும் ஈஸியான தளமாக இருக்கிறது.இவற்றையெல்லாம் வேகமாக செய்யும்பட்சத்தில் உங்களின் ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆக வாய்ப்புள்ளது. 


மேலும் படிக்க | IRCTC Free: தீபாவளியையொட்டி ரயில் பயணிகளுக்கு தண்ணீர் உணவு இலவசம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ