IRCTC Free: தீபாவளியையொட்டி ரயில் பயணிகளுக்கு தண்ணீர் உணவு இலவசம்

தீபாவளியன்று, கோடிக்கணக்கான பயணிகளுக்கு ரயிலில் இலவச உணவு மற்றும் தண்ணீர் கொடுக்கப்படுவதால், ஒரு பைசா கூட செலவழிக்க  வேண்டியதில்லை

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 15, 2022, 07:03 AM IST
  • இந்திய ரயில்வே அதிரடி அறிவிப்பு
  • ரயில் பயணிகளுக்கு உணவு இலவசம்
  • ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும்
IRCTC Free: தீபாவளியையொட்டி ரயில் பயணிகளுக்கு தண்ணீர் உணவு இலவசம்

Indian Railways: இந்த முறை தீபாவளியன்று, சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ள கோடிக்கணக்கான ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தியை ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ரயிலில் இலவச உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்... நீங்கள் ரயிலில் பயணிக்கப் போகிறீர்கள் என்றால் உணவுக்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. எந்த ரயிலில் எந்த சூழ்நிலையில் இலவச உணவு வசதி கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

இலவச உணவு மற்றும் தண்ணீர்

நீங்கள் ரயிலில் பயணிக்கப் போகிறீர்கள் என்றால், ஐஆர்சிடிசி தரப்பில் இருந்து இலவச உணவு, குளிர் பானங்கள் மற்றும் தண்ணீருக்கு பணம் எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால் உங்கள் ரயில் தாமதமானால் மட்டுமே இது நடக்கும். இந்த உணவு உங்களுக்கு IRCTC ஆல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, ரயில் தாமதமாகும்போது IRCTC-ன் கேட்டரிங் கொள்கையின் கீழ் பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க; கேஸ் சிலிண்டர் பற்றிய புதிய விதி வந்தாச்சி

இந்த வசதி எப்போது கிடைக்கும்?

ஐஆர்சிடிசி விதிகளின்படி, உங்கள் ரயில் 2 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தாமதமாக வரும்போது இந்த சலுகை உண்டு. அதுவும், எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிப்பவர்களுக்கு இந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது சதாப்தி, ராஜ்தானி, துரந்தோ போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் கட்டணம் ஏதும் செலுத்தாமல் இலவச உணவை சாப்பிடலாம்.

இத்துடன், ரயிலில் காலை உணவாக டீ-காபி, பிஸ்கட் போன்றவையும் கிடைக்கும். மாலை சிற்றுண்டி, டீ அல்லது காபி மற்றும் நான்கு ரொட்டி துண்டுகள் கொடுக்கப்படும். இது தவிர, மதியம் பயணிகளுக்கு ரொட்டி, பருப்பு, காய்கறிகள் போன்றவை இலவசமாக கிடைக்கும். சில சமயங்களில் முழுமையாகவும் கொடுக்கப்படுகிறது. உங்கள் ரயில் 2 மணி நேரம் தாமதமாக இருந்தால் பயணிகள் உணவை ஆர்டர் செய்யலாம்.

மேலும் படிக்க | Tourism: வியட்நாம் சுற்றி பார்த்துவர ரூ.50 ஆயிரம் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News