புதுடெல்லி: சனிதேவனின் அதிருப்தி மற்றும் கோபத்திற்கு கடவுள்கள் கூட பயப்படும் நிலையில், மகிழ்ச்சியாக செல்லும் வாழ்க்கையில் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க சனி பகவானின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும். மறுபுறம், சனி பகவான் மகிழ்ச்சியாக இருந்தால், வாழ்க்கையில் எந்தக் குறையும் இருக்காது. எனவே சனிபகவானின் கெட்ட பாதுகாக்க சில செயல்களை தவிர்க்குமாறு ஜோதிட சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. சனியின் அதிருப்தியைத் தவிர்க்க, செய்யக்கூடாத விஷயங்களை இன்று நாம் அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி தேவனுக்கு பிடிக்காத செயல்கள் அல்லது விஷயங்கள்: 


1. ஏழைகளையும் ஆதரவற்றவர்களையும் அவமதிக்கும் அல்லது துன்புறுத்தும் மக்களை சனி தேவரின் கோபத்திலிருந்து யாராலும் காப்பாற்ற முடியாது. இப்படி செய்பவர்களுக்கு கெட்ட காலம் தொடங்க அதிக நேரம் எடுக்காது. குறிப்பாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் அல்லது துண்புறுத்தும் செயல் சனி பகவனானை மிகவும் கோபப்படுத்துகிறது.


2. நகங்களை அழுக்காக வைத்திருக்கும் பழக்கமும், சனிபகவானை கோபுமுறச் செய்யும் பழக்கமாகும்.


3. பெண்கள் மற்றும் பெரியவர்களை அவமதிக்கும் மக்கள் மீது சனி பகவானின் கோப பார்வை நிச்சயம் விழும்.


4. அசைவம்-மது பானம் உட்கொள்வதும் சனி பகவானுக்கு கோபத்தை தரும் பழக்கமாகும். அப்படிப்பட்டவர்களின் ஜாதகத்தில் சனி கிரகம் வலுவிழந்து மோசமான பலன்களைத் தரும். சூதாட்டம் போன்ற செயல்களில் ஈடுபடும் மக்களை சனியின் அதிருப்தி ஒரு நொடியில்  அழிக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


ALSO READ | குரு பெயர்ச்சி கொட்டும் மழையில் ஆலங்குடி குருபகவானை தரிசித்த பக்தர்கள்


5. மறந்தும் கூட நாய்களை துன்புறுத்தாதீர்கள். குறிப்பாக நாய்கள் சாப்பிடும் போது தவறுதலாக கூட அதனை சீண்டாதீர்கள்.  இப்படி செய்வதால் சனி பகவான்  கோபமடைகிறார்.


6. திருடுபவர்கள், மற்றவர்களின் பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் அல்லது வஞ்சகமாக மற்றவர்களின் பணத்தை திருடி,  அவர்களை சாலையில் கொண்டு வருபவர்கள் மீது சனியின் கோபம் கனமழையாக பொழிகிறது.


சனிபகவானின் அருள் கிடைக்க  செய்ய வேண்டியவை


நோயாளிகள், ஆதரவற்றோர், முதியோர்களுக்கு எப்போதும் உதவுங்கள். நாய்களுக்கு உணவளிக்கவும். ஜாதகத்தில் சனி பலவீனமாக இருந்தால், சனி பகவானை மகிழ்விக்க  தொடர்ந்து இது போன்ற செயல்கலை செய்து வந்தால், சில நாட்களில் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் குறையும். இத்துடன் தொழிலில் ஏற்பட்டு வரும் தடைகள் நீங்கும். அதுமட்டுமின்றி சனிபகவானின் சன்னிதியில் தீபம் ஏற்றுவதும், கருப்பு பொருட்களை ஏழைகளுக்கு தானம் செய்வதும் மிகுந்த பலன் தரும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR