சொல்லமலேயே உங்க கஷ்டத்தை புரிஞ்சிக்கிற நபர்... காதலராக கிடைத்தால் இந்த 5 விஷயங்கள் முக்கியம்!
Relationship Tips: உங்கள் காதலனோ/காதலியோ நீங்கள் சொல்லாமலேயே உங்களின் உணர்வுகளை புரிந்துகொள்கிறாரா, அப்படியானால் நீங்கள் காதலிக்கும் போது இந்த 5 விஷயங்களை மறக்காமல் பின்பற்ற வேண்டும்.
Relationship Tips In Tamil: மற்றவர்களின் உணர்ச்சிகளையும், தேவைகளையும் புரிந்துகொண்டு பாசத்துடனும், அதிக அக்கறையுடனும் இருக்கும் பலரை நீங்கள் உங்களின் வாழ்வில் பார்த்திருப்பீர்கள். சுற்றி இருக்கும் நபர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களின் மனவோட்டம் என்ன, அவர்களின் எதிர்பார்ப்புகளை என்ன என்பதை அவர்கள் சொல்லாமலேயே தெரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவார்கள். இவர்களை ஆங்கிலத்தில் Highly Sensitive Person (HSP) என்பார்கள்.
உலக மக்கள்தொகையில் 20 சதவீதம் பேர் இதுபோன்ற நபர்களாக இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இப்படியான மனிதர்கள் உண்மையிலேயே கொடுத்தவைத்த மகாராஜாக்கள்/மகாராணிகள் எனலாம். அவர்களின் சுற்றமும் சரி, மனதும் சரி எவ்வித பிரச்னையும் இன்றி தூய்மையாக இருக்கும். அப்படிப்பட்டவர்களை நீங்கள் காதலனாகவோ, காதலியாகவோ பெற்றுவிட்டால் காதல் வாழ்வில் நீங்களும் பெரிய அதிர்ஷ்டசாலிதான்.
இருந்தாலும் அப்படிப்பட்ட நபர்களிடம் அவர் எப்போதும் அன்பாக தானே இருப்பார் என சொல்லி எல்லை மீறிவிடக்கூடாது. அவருக்கு எதிர்பார்ப்புகள் இருக்கும், அதனையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இப்படிப்பட்டவர்களை நீங்கள் காதலிக்கும் போது இந்த 5 விஷயங்களை நீங்கள் மறக்காமல் பின்பற்ற வேண்டும். அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
மேலும் படிக்க | சமீபத்தில் திருமணமானவரா நீங்கள்? உங்கள் துணையை புரிந்து கொள்வது எப்படி?
பேசுவதை உற்று கவனியுங்கள்
நீங்கள் காதலிக்கும் அந்த நபர் உங்களின் தேவைகளையும், மனவோட்டத்தையும் நீங்கள் சொல்லாமலேயே புரிந்துகொள்கிறார் என்றால் அவர்தான் அந்த HSP நபர். இருந்தாலும், நீங்கள் அவருடன் மனம் விட்டு பேசுவதும், அவர் சொல்வதை உற்று கவனிப்பதும் உங்களின் உறவை இன்னும் பலமாக்கும். அவருக்கு உங்களை பற்றி நன்றாக புரிகிறது என்பதை அவரிடம் சொல்லி அதற்கு பாராட்டவும் வேண்டும்.
அவர்களையும் தெரிந்துகொள்ளுங்கள்
அவர்களுக்கு உங்களை தெரிந்தது போல், நீங்களும் அவர்களை புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு மற்றவர்களை விட மிக ஆழமான உணர்வுகள் இருக்கும். அவர்கள் அதை வெளிப்படையாக காட்டாமல் மறைத்துவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, அவரின் நடத்தையை புரிந்துகொண்டு அவரின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நீங்கள் அவருக்கு தீர்வு சொல்ல வேண்டும் என்றில்லை, அவரின் உணர்ச்சியை புரிந்துகொண்டாலே போதுமானது.
நேரம் செலவிடுங்கள்
அவர்களை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அவருடன் அதிக நேரம் செலவழிப்பது நல்லது. காதல் உறவில் இருக்கும்போதே இருவரும் முடிந்தளவிற்கு நிறைய நேரத்தை செலவிட வேண்டும். அவருடன் பொறுமையாக குறிப்பிட்ட தூரத்திற்கு நடந்து செல்லுங்கள். எனவே, அவரின் மனதில் இருப்பது நிதானமாக வெளிவரும் அவர்களின் பயம் மற்றும் பாதுகாப்பின்மை குறித்து பேசுங்கள். எனவே, அவரின் உணர்ச்சி போராட்டத்தில் இருந்து அவர் வெளியே வருவார்.
ஸ்பேஸ் கொடுங்கள்
எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும் உங்களை முன்னிலைப்படுத்தாமல் அவருக்கும், அவரின் உணர்ச்சிகளுக்கும் முன்னுரிமை கொடுங்கள். அவர்கள் சிந்திப்பதற்கும், ஒரு சூழலை அலசுவதற்கும் அவருக்கு சற்று இடம் அளியுங்கள், அதுவே போதும்.
சர்ப்ரைஸ் முக்கியம்
அவர்களுக்கும் அடிக்கடி சர்ப்ரைஸ் அளியுங்கள். அவரை சர்ப்ரைஸாக அவருக்கு பிடித்த இடங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். புத்தகங்கள் போன்றவற்றை வாங்கிக்கொடுங்கள். அவரும் மற்றவர்களால் கவனிக்கப்படுகிறார் என்பது அவருக்கு புரிய வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | காதலி பிறரிடம் பேசுவதால் பொறாமையாக இருக்கிறதா? ஆசுவாசப்படுத்திக் கொள்ள டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ