காதலி பிறரிடம் பேசுவதால் பொறாமையாக இருக்கிறதா? ஆசுவாசப்படுத்திக் கொள்ள டிப்ஸ்

Relationship Tips : காதலி பிறரிடம் பேசும்போது உங்களுக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது என்றால், நீங்கள் உங்களை இந்த வழிகளில் எல்லாம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்.

Relationship Tips : காதலி வேறு யாருடனாவது சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும்போது உங்களுக்கு பொறாமையாக இருந்தால், உங்களை ஆசுவாசப்படுத்த இந்த வழிகளை பின்பற்றுங்கள். 

1 /12

காதல் வாழ்க்கை ஒரு உன்னதமான வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் நுழைந்துவிட்டால் பல்வேறு விதமான உணர்ச்சி நிலைகளை எதிர்கொள்ள நேரிடும். அன்பான, பரிவான காதல் வாழ்க்கையில் சில நேரங்களில் பொறாமை குணமும் எட்டிப் பார்க்கும். 

2 /12

இது சந்தேகம், பாதுகாப்பின்மை போன்ற உணர்ச்சி நிலைகளையும் சந்திக்க நேரிடும். குறிப்பாக உங்கள் காதலி வேறொருவருடன் சிரித்து பேசுவதை பார்க்கும்போது மனம் பாரத்தின் உச்சத்துக்கே சென்றுவிடும். 

3 /12

உங்களுடன் இருப்பதைக் காட்டிலும் வேறொருவடன் சிரித்து பேசிக் கொண்டு அதிக நேரத்தை செலவிடுகிறார் என்று தெரிந்துவிட்டால், சந்தேகம் பல கிளைகளாக பிரிந்து மனதுக்குள் அலைபாய தொடங்கும். 

4 /12

இது ஒருகட்டத்தில் உங்களின் அருமையான காதல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பொறாமை குணத்தை அகற்றவும், உங்களை எப்படி  ஆசுவாசப்படுத்துவது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

5 /12

உங்களுக்குள் பொறாமை வந்துவிட்டது எப்படி எல்லாம் வெளிப்படும் என்றால் காதலி பிறருடன் பேசுவதை அன்பாக கண்டிப்பீர்கள். அது தொடரும்பட்சத்தில் கொஞ்சம் கோபம் வெளிப்படும். 

6 /12

சிறிய சிறிய விஷயங்களுக்கு எல்லாம் காதலியுடன் சண்டை போட தொடங்குவீர்கள். கேள்விகள் எழுப்புவது அதிகரிக்கும். அந்த கேள்விகள் காதலிக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இந்த விஷயத்தை தவிர்க்க காதலி மீதான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்.   

7 /12

உங்கள் இருவருக்கும் இடையிலான நம்பிக்கை பலமாக இருக்கும்போது மூன்றாவது நபரின் என்ட்ரி வர வாய்ப்பே இல்லை. ஒருவருடன் பேசுவது என்பது உங்கள் உறவில் விரிசல் ஏற்படும் என்று நினைப்பது தவறானது.  

8 /12

உங்கள் காதலிக்கு போதுமான நேரத்தை ஒதுக்குங்கள். அப்படி நீங்கள் செய்யாதபோது, அவர்கள் மனதில் தான் அவருக்கு முக்கியமில்லையோ என்ற எண்ணம் எழும். அந்த ஆற்றாமையை போக்ககூட பிறருடன் பேசி தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.

9 /12

அதனால் உங்களின் காதலிக்கு போதுமான நேரத்தை ஒதுக்க முன்வாருங்கள். காதலியின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி உங்களின் அரவணைப்பையும், அன்பான வார்த்தைகளையும் பேசி அவர்களை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ளுங்கள். 

10 /12

சின்ன சின்ன சர்பிரைஸ்கள் உங்கள் மீதான நம்பிக்கையை காதலிக்கு ஏற்படுத்தும். அவர்களுக்குள் தனிமை எண்ணம் எழாமல் பார்த்துக் கொள்வதே காதலனின் மிகச் சிறந்த குணம். 

11 /12

இதனையும் மீறி உங்களுக்குள் பொறாமை வருகிறது என்றால் அதற்கான உண்மையான காரணத்தை கண்டறிய முயற்சி செய்யுங்கள். அதனை இருவரும் அமர்ந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். 

12 /12

காதலிக்காக உங்களின் நடத்தைகளை சில மாற்றம் செய்து கொள்வதில் தப்பில்லை. பரஸ்பரம் புரிதல் இருக்கும்போது இருவருக்கும் இடையே சந்தேகமே வராது. மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.