Budget 2023: பட்ஜெட் விவரங்களை உடனடியாக பெற இதை செய்யுங்கள்
Union Budget Mobile App: மத்திய அரசின் 2023-24 முழு பட்ஜெட் பிப். 1 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதை மொபைல் செயலி மூலமாகவே முழுமையாக அறிந்துகொள்ளலாம்.
Union Budget Mobile App: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அதாவது நிதிநிலை அறிக்கையை வரும் பிப். 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார். 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மோடி தலைமையிலான அரசின், கடைசி முழு பட்ஜெட் இதுவாகும்.
மத்திய பட்ஜெட் தாக்கலின் நேரடி ஒளிபரப்பு லோக்சபா டிவி, ராஜ்யசபா டிவி, டிடி நியூஸ் ஆகியவற்றில் பிப். 1ஆம் தேதி அன்று காலை 11 மணிக்குத் தொடங்கும். இதுதவிர்த்து, சில தனியார் சேனல்கள் நிதியமைச்சரின் உரையை ஒளிபரப்பும்.
அந்த வகையில், நிர்மலா சீதாராமனின் உரைக்குப் பிறகு, முழு பட்ஜெட்டின் ஆவணமும் பொதுமக்களுக்காக 'Union Budget Mobile App' என்ற மொபைல் செயலியில் வெளியிடப்படும். இந்த செயலி மூலம், பட்ஜெட் ஆவணங்களின் முழுமையான தொகுப்பினை நீங்கள் அணுகலாம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் OS இயங்குதளங்களில் இந்த செயலி கிடைக்கிறது.
மேலும் படிக்க | மக்களவை தேர்தல் இன்று நடந்தால்... ஆட்சியை கைப்பற்றுமா பாஜக - குட் நியூஸ் யாருக்கு?
செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?
யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியை ஆண்ட்ராய்ட் சாதனங்களில் உள்ள கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தும், iOS சாதனங்களில் உள்ள ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். யூனியன் பட்ஜெட் இணைய தளத்திலிருந்து (www.Indiabudget.Gov.In) இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.
தற்போது, 2021-22 பட்ஜெட் மற்றும் 2022-23 பட்ஜெட் தொடர்பான தகவல்கள் இந்த செயலியில் உள்ளன. தகவல் பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு, தேவையான தகவல்களைச் எளிதாக பார்க்க இயலும்.
பட்ஜெட் 2023 ஆவணத்தைச் சரிபார்க்க:
https://www.indiabudget.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்
Budget Speech என்பதைக் கிளிக் செய்யவும்
2023-2024 PDF ஆவணத்தைக் கண்டறியவும் (பட்ஜெட் உரைக்கு பின்)
இதுகுறித்து பெரியும் அறிந்திருந்தாவர்களுக்கு, வருடாந்திர பட்ஜெட், மானியங்களுக்கான கோரிக்கை (DG) மற்றும் அரசியலமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட நிதி மசோதா உட்பட அனைத்து 14 பட்ஜெட் ஆவணங்களும்,எளிய முறையில் ஆப்பின் பயன்பாட்டில் கிடைக்கும். டிஜிட்டல் வசதியின் எளிய வடிவத்தைப் பயன்படுத்தி எம்.பி.க்கள் மற்றும் பொதுமக்களின் பட்ஜெட் ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | Budget 2023: அல்வா கிளறிய நிதியமைச்சர்! பட்ஜெட்டுக்கு முன் அல்வா கிளறப்படுவது ஏன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ