New Rice In Ration Shops in India : பொங்கல் தொகுப்பு வழங்கப்படுவது போல் ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பு வழங்கப்படுமா? என எதிர்பார்த்து காத்திருந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு இப்போது குட்நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. இவ்வளவு நாள் ரேஷன் அரிசி மோசம் என நினைத்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இனி ரேஷன் அரிசியை விரும்பி சாப்பிடப்போகிறார்கள். ஏனென்றால் மத்திய அரசு ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசியை தரம் உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது. அதாவது, செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து அதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் கொடுத்திருக்கிறது.  பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) மற்றும் பிற நலத் திட்டங்கள் உள்ளிட்ட அரசின் அனைத்துத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் அரிசியை செறிவூட்டி வழங்குவதற்கான ஒப்புதல் இப்போது கொடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு 100 விழுக்காடு மத்திய அரசே நிதியுதவி வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டம் (TPDS), ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை (ICDS)யின் கீழ் நாடு முழுவதும் இரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. 


ரேஷன் கடை அரிசி : மத்திய அரசு ஒப்புதல்


ஏப்ரல் 2022 ஆம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA), மார்ச் 2024-க்குள் நாடு முழுவதும் நெல் வலுவூட்டல் முயற்சியை படிப்படியாக செயல்படுத்த முடிவு செய்தது. மூன்று கட்டங்களும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, அனைவருக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2019 மற்றும் 2021 க்கு இடையில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் (NFHS-5) படி, இரத்த சோகை இந்தியாவில் ஒரு பரவலான பிரச்சினையாக உள்ளது. இது குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களை பல்வேறு வயது மற்றும் வருமான நிலைகளில் பாதிக்கிறது. இரும்புச்சத்து குறைபாடு தவிர, வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற பிற வைட்டமின் மற்றும் தாதுக் குறைபாடுகளும் நீடித்து, மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறனை பாதிக்கிறது.


மேலும் படிக்க | ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ், சீக்கிரம் வரப்போகுது


பாதிக்கப்படக்கூடிய மக்களில் இரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள நடவடிக்கையாக உலகளவில் உணவு வலுவூட்டல் பயன்படுத்தப்படுகிறது. இந்திய சூழலில் 65% மக்கள் அரிசியை பிரதான உணவாக உட்கொள்வதால், அரிசியானது நுண்ணூட்டச்சத்துக்களை வழங்குவதற்கான சிறந்த மூலமாக பார்க்கப்படுகிறது. நெல் செறிவூட்டலில் FSSAI பரிந்துரைத்த தரங்களின்படி நுண்ணூட்டச் சத்துக்களால் இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி 12 ஆகியவை கொண்டு செறிவூட்டப்பட்ட அரிசி கர்னல்களை (FRK) வழக்கமான அரிசியுடன் (Custom Milled Rice) சேர்ப்பது ஆகும்


செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன?


மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-அரசு பதப்படுத்தப்பட்ட அரிசியை விநியோகிப்பதற்கான காரணம், இரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் குறைபாட்டை நிவர்த்தி செய்வதே இதன் நோக்கமாகும் என்றார். செறிவூட்டப்பட்ட அரிசி என்பது அதன் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்த அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட அரிசி ஆகும். வலுவூட்டல் செயல்முறையானது ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்துப் போராட வழக்கமான அரிசியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைச் சேர்க்கப்படும். அரிசியை பிரதான உணவாக அதிகம் நம்பியிருக்கும் மக்களுக்கு ஆரோக்கியத்துக்கு பெரும் பங்களிக்கும். 


மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டுக்கு எவ்வளவு நாட்களில் கிடைக்கும்? சூப்பர் அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ