Indian Bank Fraud: பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. வங்கி அறிக்கை ஒன்றில் இந்தியன் வங்கி இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செயல்படாத சொத்துகள் (Non-Performing Assets) கணக்கு தொடர்பாக 266 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை, இந்தியன் வங்கி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு (Reserve Bank of India) அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.  


மூன்று செயல்படாத சொத்துக்கள் தொடர்பாக, இந்திய வங்கியில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த மோசடி குறித்த தகவல் அண்மையில் தான் தெரியவந்தது. அதுவும் மொத்தம் 266 கோடி மோசடி ரூபாய் அளவில் வங்கி இழப்பை சந்தித்துள்ளது. செயல்படாத சொத்துகள் (Non-Performing Assets) கணக்கு தொடர்பாக 266 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவே மோசடி நடைபெற்றுள்ளதாக இந்தியன் வங்கி.


Also Read | லாட்டரியில் இரண்டாவது முறையாக $20 லட்சம் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி  


மோசடி செய்த நிறுவனங்கள் 


வங்கியில் ரூ.266 கோடி மோசடி நடந்துள்ளதாகவும், இதில் எம்பி பார்டர் செக்போஸ்ட் டெவலப்மென்ட் கம்பெனி லிமிடெட் (MP Border Checkpost Development Company Limited) 166.89 கோடி ரூபாய் தொகையை கடன் நிலுவை வைத்திருக்கிறது.
புனே சோலாப்பூர் சாலை மேம்பாடு (Pune Solapur Road Development) என்ற நிறுவனம் 72.76 கோடி ரூபாய் நிலுவையையும், சோனாக் (Sonak) நிறுவன 27.08 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாகவும் இந்தியன் வங்கி தெரிவித்திருக்கிறது.
 
இது தவிர, மார்ச் மாதத்திலும் இந்தியன் வங்கியில் ரூ.35 கோடி மோசடி நடந்துள்ளதாகவும், வங்கி இந்திய ரிசர்வ் வங்கிக்கு தகவல் தெரிவித்திருந்தது. 3 கணக்குகள் பற்றிய தகவலைக் கொடுத்து, அவற்றை மோசடி கணக்குகள் என்று வங்கி கூறியிருக்கிறது.


இந்த மூன்று நிறுவனங்களைத் தவிர, எஸ் குமார்ஸ் நேஷன்வைட் லிமிடெட் (S Kumars Nationwide Limited), பிரியா லிமிடெட் (Priya Limited) மற்றும் யுவராஜ் பவர் ப்ராஜெக்ட்ஸ் (Yuvraj Power Projects) ஆகிய நிறுவனங்கள் முறையே 14.51 கோடி ரூபாய், 9.73 கோடி ரூபாய், 11.05 கோடி ரூபாய் அளவிலான தொகையை திரும்பச் செலுத்த வேண்டியுள்ளது என்றும் இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.


Also Read | போஸ் கொடுத்த பாம்பு, கிஸ் கொடுத்த நபர், வைரலான வீடியோ!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR