போஸ் கொடுத்த பாம்பு, கிஸ் கொடுத்த நபர், வைரலான வீடியோ!!

வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒருவர் பாம்புடன் உல்லாசமாக இருக்கும் விதம், அதன் தலையில் முத்தமிடும் விதம் அனைவரையும் கலங்கடித்ததுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 1, 2021, 06:21 AM IST
  • பாம்பை முத்தமிடும் நபரின் வீடியோ வைரலானது.
  • இதைப் பார்ப்பவர்களுக்கே கதி கலங்குகிறது.
  • இந்த நபர் பாம்பிற்கு 'முத்தம்' கொடுக்கும் விதத்தைப் பார்த்தால், அவருக்குள் இருக்கும் துணிச்சலை அறிந்துகொள்ள முடிகின்றது.
போஸ் கொடுத்த பாம்பு, கிஸ் கொடுத்த நபர், வைரலான வீடியோ!! title=

பாம்புக்கு முத்தம் இடும் வீடியோ: இந்த உலகில் ஆபத்தான செயல்களைச் செய்து அதில் மகிழ்வோர் பலர் உள்ளனர். பல நேரங்களில் மக்கள் டேரிங்கான, அதாவது ஆபத்தான விஷயத்துக்காக தங்கள் உயிரையும் பணயம் வைக்கின்றனர். இதில் சிலருக்கு வெற்றியும் கிடைக்கும். அதே சமயம் சில விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்கின்றன. அதாவது உயிர் போகும் அளவுக்குக்கூட இவை ஆபத்தானதாக அமைகின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவில் உள்ள நபர் செய்வதைப் பார்த்து, பார்ப்பவர்களுக்கே கதி கலங்குகிறது. இந்த வீடியோவைப் (Video) பார்த்து சிலர் ஆச்சரியப்படுகின்றனர், சிலர் ரசிக்கின்றனர், சிலர் அச்சத்த்தின் உச்சத்திற்கே செல்கின்றனர். 

சிலருக்கு விலங்குகளுடன் விளையாடுவதும் வேடிக்கை பார்ப்பதும் பிடிக்கும். பலர் விலங்குகள் மீது மிகுந்த பாசம் கொண்டவர்களாக உள்ளனர், எப்போதும் தங்கள் அருகில் தங்களுக்கு பிடித்த விலங்குகளை வைத்திருக்க விரும்புகின்றனர். 

ஆனால், எவ்வளவு தைரியம் உள்ளவர்களும், படையே நடுங்கும் பாம்பைக் (Snake) கண்டால் சிறிது பதறித்தான் போவார்கள். பாம்பு இருக்கிறது என்று கேள்விப்பாட்டாலே, அங்கிருந்து ஓடதான் அனைவரும் முயற்சிப்பார்கள். ஆனால், வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒருவர் பாம்புடன் உல்லாசமாக இருக்கும் விதம், அதன் தலையில் முத்தமிடும் விதம் அனைவரையும் கலங்கடித்ததுள்ளது. 

அந்த வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by@_goga_ni_daya_)

ALSO READ: Viral Video: கதவில் ஒய்யாரமாய் ஆடி மாஸ் காட்டிய பாம்பு, வைரலான வீடியோ

இதயத்தை பதற வைக்கும் வீடியோ

இந்த வீடியோவில் இருக்கும் நபர் பாம்பிற்கு 'முத்தம்' கொடுக்கும் விதத்தைப் பார்த்தால், அவருக்குள் இருக்கும் துணிச்சலை அறிந்துகொள்ள முடிகின்றது. மேலும், அவர் பாம்பிற்கு முத்தமிடும் போது, அந்த பாம்பு அதற்கு ஆட்சேபிக்கும் வகையில் ஒன்றும் செய்யவில்லை, அவரை எதுவும் செய்யவில்லை, அங்கிருந்து எங்கும் செல்லவுமில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது.

இந்த நபர் பாம்புக்கு முத்தம் இடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் (Viral Video) ஆகி வருகிறது. இந்த வேடிக்கையான வீடியோ இன்ஸ்டாகிராமில் 'goga_ni_daya' என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். பலர் இந்த வீடியோவுக்கு பலவித கமெண்டுகளையும் அளித்து வருகின்றனர். 

ALSO READ: Viral Photo: பாம்பு சட்டை உரித்ததை பார்த்திருக்கிறீர்களா..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News