இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் உணவு சமைக்க பெரும்பாலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் எரிவாயு விலை உயர்வு விண்ணைத் தொட்டு வருவதால், மக்கள் விலைவாசியை சமாளிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு ஒரு நிவாரணம் அளிக்கும் வகையில், ஒரு சிறப்பு சலுகையைப் பற்றி இந்த பதிவில் கானவுள்ளோம். இதன் மூலம் நீங்கள் இலவசமாக எல்பிஜி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். இந்தச் சிறப்புச் சலுகையை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பதை கீழே காணலாம். 


Paytm இந்த சிறந்த சலுகைகளை வழங்குகிறது


இந்த கேஸ் புக்கிங் சலுகை பேடிஎம் (Paytm) மூலம் கிடைக்கிறது. Paytm மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்தால், வாடிக்கையாளர்கள் ஒரு எரிவாயு சிலிண்டரை முற்றிலும் இலவசமாகப் பெறலாம். எல்.பி.ஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் புதிய பயனர்களுக்காக Paytm இந்த அற்புதமான சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. 


Paytm இன் இந்த புதிய சலுகையின் கீழ், புதிய பயனர்கள் முதல் முன்பதிவில் ரூ.30 பிளாட் கேஷ்பேக் பெறலாம். Paytm செயலியில் பணம் செலுத்தும் போது "FIRSTCYLINDER" என்ற ப்ரோமோகோடைப் பயன்படுத்த வேண்டும்.


இந்த நிறுவனங்களின் சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம்


மூன்று பெரிய LPG நிறுவனங்களான இண்டேன் (Indane), ஹெச்.பி கேஸ் மற்றும் பாரத் கேஸ் ஆகியவற்றின் சிலிண்டர்களின் முன்பதிவுக்கு இந்த கேஷ்பேக் சலுகை பொருந்தும். Paytm Postpaid எனப்படும் 'Paytm Now Pay Later' திட்டத்தில் பதிவு செய்து, பயனர்கள் அடுத்த மாதம் சிலிண்டர் முன்பதிவுகளுக்கு பணம் செலுத்தும் வசதியும் இதில் கிடைக்கும். 


ALSO READ | LPG Offer: மலிவாக சிலிண்டர் புக் செய்ய சூப்பர் வாய்ப்பு, ரூ. 2700 வரையிலான பம்பர் சலுகைகள்


இது தவிர, ஏற்கனவே உள்ள Paytm பயனர்களும் சிலிண்டர்களை இலவசமாகப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள். இதற்கு, Paytm செயலியில் பணம் செலுத்தும் செயல்முறையை முடிக்கும் முன் வாடிக்கையாளர் 'FREEGAS' என்ற கூப்பன் குறியீட்டைப் பயன்படுத்தினால் போதும். Paytm பயனர்கள் தங்கள் எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தையும் கண்காணிக்க முடியும்.


இப்படித்தான் முன்பதிவு செய்ய வேண்டும்


கேஷ்பேக் வசதியைப் பெற, வாடிக்கையாளர் Paytm செயலியில் உள்ள 'Recharge And Pay Bills' பகுதிக்குச் சென்று 'Book a Cylider' விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும். இந்தப் பிரிவைத் திறந்தவுடன், உங்கள் எல்பிஜி இணைப்பு (LPG Connection) தொடர்பான தகவல்களை இங்கே நிரப்ப வேண்டும். அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் பணம் செலுத்தும் பிரிவை நோக்கி நகரத் தொடங்குவீர்கள். பிறகு, கீழே 'Apply Promo Code' என்ற விருப்பத்தைக் காண்பீர்கள்.


இந்த விருப்பத்தை கிளிக் செய்து, இங்கே 'FREEGAS' குறியீட்டை உள்ளிட வேண்டும். குறியீட்டை உள்ளிட்ட பிறகு, 'Code applied Successfully' என்று வரும். இப்போது நீங்கள் பணம் செலுத்தியவுடன், பணம் செலுத்துதல் வெற்றிகரமாக முடிந்தவுடன் ஸ்கிராட்ச் கார்டைப் பெறுவீர்கள். உங்கள் கேஷ்பேக் தொகையை நீங்கள் ஸ்கிராட்ச் செய்தவுடனே தெரிந்துகொள்ள முடியும்.


ALSO READ | February 1 முதல் மிகப்பெரிய மாற்றங்கள்: முழு விவரம் இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR