வெறும் ரூ.634க்கு எல்பிஜி சிலிண்டர் வாங்க அரிய வாய்ப்பு

LPG Composite Cylinder: நாட்டின் வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு விலையில் சமையல் சிலிண்டர்கள் கிடைக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 5, 2022, 03:12 PM IST
  • எல்பிஜி சிலிண்டர் ரூ.634க்கு மட்டுமே கிடைக்கும்
  • டெல்லியில் சிலிண்டர் விலை ரூ.1998.5 ஆக இருந்தது.
  • தற்போது 28 நகரங்களில் சேவை தொடங்கப்பட்டுள்ளது
வெறும் ரூ.634க்கு எல்பிஜி சிலிண்டர் வாங்க அரிய வாய்ப்பு title=

புதுடெல்லி: LPG Composite Cylinder: தொடர்ந்து அதிகரித்து வரும் எல்பிஜி விலையால் நீங்களும் சிரமப்படுகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. தற்போது உங்களுக்கு எல்பிஜி சிலிண்டர் வெறும் 633.5 ரூபாய்க்கு கிடைக்கும். உண்மையில் இந்த விலைக்கு சிலிண்டர் கிடைக்கத்தான் செய்கிறது. இது காம்போசிட் சிலிண்டர் (Composite Gas Cylinder) ஆகும். 

காம்போசிட் சிலிண்டரின் நன்மைகள்
Indane இன் புதிய காம்போசிட் சிலிண்டர் (LPG Composite Cylinder) துருப்பிடிக்காது. மிகவும் பொதுவான எல்பிஜி சிலிண்டருக்கு நீங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும், அதே சமயம் காம்போசிட் சிலிண்டருக்கு நீங்கள் ரூ.633.50 மட்டுமே செலுத்தினால் போதும். இந்த சிலிண்டரில் 10 கிலோ கேஸ் (LPG Gas Cylinder) மட்டுமே கிடைக்கும். குறைவான உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கு இந்த கேஸ் சிலிண்டர் மிகவும் வசதியானது.

ALSO READ | ஆதார் அட்டையை மட்டும் காட்டி நிமிடங்களில் எல்.பி.ஜி இணைப்பு பெறலாம்

சென்னையில் 10 கிலோ எடை கொண்ட காம்போசிட் சிலிண்டர் விலை 645 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.634க்கும், மும்பையில் ரூ.634க்கும் மற்றும் கொல்கத்தாவில் ரூ.652க்கும் இந்த சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. 5 கிலோ காம்போசிட் சிலிண்டரும் கிடைக்கிறது. இதன் விலை 502 ரூபாய் மட்டுமே. 

காம்போசிட் சிலிண்டருக்கு முன்பணம் செலுத்த வேண்டும்
இந்த காம்போசிட் சிலிண்டரை வாங்குவதற்கு நீங்கள் முன்பணம் செலுத்த வேண்டியிருக்கும். அதன்படி 5 கிலோ சிலிண்டருக்கு 2,150 ரூபாயும், 10 கிலோ சிலிண்டருக்கு 3,350 ரூபாயும் செலுத்த வேண்டும்.

28 நகரங்களில் கிடைக்கும்
இந்தியன் ஆயில் (Indian Oil) படி, மும்பையில் 10 கிலோ எரிவாயு கொண்ட காம்போசிட் கேஸ் சிலிண்டர் ரூ.634க்கும், கொல்கத்தாவில் ரூ.652க்கும், சென்னையில் ரூ.645க்கும், லக்னோவில் ரூ.660க்கும் விற்கப்படுகிறது. அதே சமயம், இந்தூரில் ரூ.653 ஆகவும், போபாலில் ரூ.638 ஆகவும், கோரக்பூரில் ரூ.677 ஆகவும், பாட்னாவில் ரூ.697 ஆகவும் உள்ளது. தற்போது இது நாட்டின் 28 நகரங்களில் கிடைக்கிறது. விரைவில் மற்ற நகரங்களிலும் கிடைக்கும் என நம்புகிறோம்.

முன்னதாக கடந்த ஜனவரி 1ஆம் தேதி வர்த்தக பயன்பாட்டுக்கான (Commercial Gas Cylinder) சிலிண்டர் விலை 102 ரூபாய் குறைக்கப்பட்டது. டெல்லியில் சிலிண்டர் விலை ரூ.1998.5 ஆக இருந்தது. வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டாலும், வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News