அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து  கோவில்களை விடுவிக்க 3 கோடிக்கும் அதிகமான மக்கள் விரும்புகிறார்கள் என்று இஷா மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு மாதத்திலேயே பெருமளவிலான எண்ணிக்கையிலான மக்கள் இந்த கோரிக்கையை விடுத்திருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது என்று இஷா நிறுவனம் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.



’FreeTNTemples’ பிரச்சாரத்தை ஆரம்பித்ததில் இருந்து மூன்று கோடிக்கும் அதிகமானோர் இந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த ஹேஷ்டாகை வைரலாக்குகின்றனர் என்று இஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் (Jaggi Vasudev) தெரிவித்துள்ளார்.


Also Read | அஜய் தேவ்கனின் பிறந்த நாள் பரிசாக RRR Motion Poster


இது தமிழக மக்களின் விருப்பம் மட்டுமல்ல, நீண்டகாலமாக மக்களின் மனதில் இருக்கும் வேட்கை என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். இந்த சீர்திருத்தத்தை நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவக்ரளில் ஆன்மீகத் தலைவர்களும் உள்ளனர் என்று அவர் முதல்வர் கே பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எம் கே ஸ்டாலினுக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.



அதோடு, சத்குரு வாசுதேவ் தனது ட்விட்டர் கணக்கின் மூலமாகவும் தலைவர்களிடம் ஒரு வேண்டுகோளை வெளியிட்டிருந்தார்: அதில், இந்த பதிவின் மூலம் 3 கோடிக்கு மேற்பட்ட தமிழர்களின் மனதின் விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொறுப்புள்ள அரசியல் தலைவர்களாக, திராவிட பெருமையின் மையமான கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன், தமிழ்நாட்டின் ஆத்மாவை அதன் முழு மகிமைக்கும் சாத்தியத்திற்கும் மீட்டெடுப்பவர்களாக உங்களை மக்கள் எப்போதும் நினைவில் வைக்கட்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


உங்கள் தலைமையின் கீழ் தங்களின் மதிப்பிற்குரிய கோயில்கள் அவர்களுக்கு திருப்பித் தரப்படும் என்று தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளிக்குமாறு முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரிடம் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
அண்மையில் தமிழகத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்த சத்குரு,  தமிழக அறநிலைத்துறையின்  கட்டுப்பாட்டில் இருந்து ஆலயங்களை விடுவிப்பதாக தேர்தல் அறிக்கையில் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.


ALSO READ: வாடிக்கையாகிவிட்ட தேர்தல் வேடிக்கைகள்: சூடுபிடிக்கும் தேர்தல் களத்தின் சில சுவாரசியங்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR