அஜய் தேவ்கனின் பிறந்த நாள் பரிசாக RRR Motion Poster

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் பிறந்தநாள் பரிசாக புதிய 'RRR' திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 2, 2021, 05:21 PM IST
  • அஜய் தேவ்கனின் பிறந்த நாள் பரிசாக RRR திரைப்பட போஸ்டர் வெளியீடு
  • அஜய் தேவ்கனின் 52வது பிறந்தநாள் இன்று
  • ஆலியா பட் மற்றும் ராம் சரண் பிறந்தநாளிலும் அவர்களது first look போஸ்டர் வெளியிடப்பட்டது
அஜய் தேவ்கனின் பிறந்த நாள் பரிசாக RRR Motion Poster title=

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் பிறந்தநாள் பரிசாக புதிய 'RRR' திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி. 

அஜய் தேவ்கனின் ஃபர்ஸ்ட் லுக் உலக புகழ்பெற்ற நடிகர் அஜய் தேவ்கனின் 52 வது பிறந்தநாளில் வெளிவந்து அவரை நெகிழச் செய்துள்ளது. அஜய் தேவ்கனின் பிறந்தநாளை மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக மாற்றி, அவரது ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு பரிசாக ஆர்.ஆர்.ஆர் திரைப்பட குழுவினர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதனால் நெகிழ்ந்த அஜய் தேவ்கன் தனது இன்ஸ்டாகிராமில் இயக்குநர் ராஜமெளலிக்கு நன்றி தெரிவித்ததோடு, "இதுபோன்ற ஒரு அற்புதமான மற்றும் சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் என்னைக் கற்பனை செய்து பொருத்தியதற்கு நன்றி" என்றுபதிவிட்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஒரு சமூக ஊடக பதிவிட்ட தேவ்கன், தனது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தார். தனது பிறந்தநாளில் தனது கதாபாத்திரத்தின் first look தோற்றம் வெளியாகும் என்றும், எஸ்.எஸ்.ராஜமெளலி தனது கதாபாத்திரத்தை எவ்வாறு வடிவமைத்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்த இன்னும் காத்திருக்க முடியாது என்று கூறியிருந்தார்.

Also Read | மு.க. ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை: தேர்தல் நேரத்து திருவிளையாடலா?

இதற்கு முன்னதாக, ஆலியா பட் மற்றும் ராம் சரண் ஆகியோரின் first look தோற்றத்தை படக் குழுவினர் அவரவர் பிறந்தநாளில் வெளியிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராஜமெளலியின் பான்-இந்தியா திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், சமுத்திரகனி, ஒலிவியா மோரிஸ், அலிசன் டூடி, மற்றும் ரே ஸ்டீவன்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்த படம் 1920 களுக்கு முந்தைய காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு கற்பனைக் கதை. அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கோமரம் பீம் ஆகிய இரு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம்.

2020, ஜூலை 30ஆம் தேதியன்று 'RRR' திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக, பட வெளியீடு தாமதமானது.  

ALSO READ: வாடிக்கையாகிவிட்ட தேர்தல் வேடிக்கைகள்: சூடுபிடிக்கும் தேர்தல் களத்தின் சில சுவாரசியங்கள்

பாகுபலி திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கும் 'RRR' திரைப்படத்தை டி.வி.வி தனய்யா தயாரித்துள்ளார். அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் 'RRR', இந்த ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி பல மொழிகளில் வெளியாகவிருக்கிறது.  

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News