நடுவானில் பரந்த விமானத்தில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட சண்டையால் விமானம் பாதி வழியிலேயே தரையிறக்கம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் பல விசித்திரமான நிகழ்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றனர். அதில், சில சம்பவம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், இன்னும் சில சிரிப்பில் ஆழ்த்தும். இந்நிலையில், நடுவானில் பரந்த விமானத்தில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட சண்டையால் விமானம் பாதி வழியிலேயே தரையிறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பிரிட்டன் முதல் மெக்சிகோ வரை TUI நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் எட்வர்ட் மோங்கன் (Edward Morgan) என்ற 42 வயது மதிக்கதக்க ஒருவர் தன் மனைவியுடன் பயணித்துள்ளார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது திடீரென கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நடுவானில் விமானம் பறக்கும்போது இருவரும் சண்டைபோட்டுக்கொண்டது அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது இதை கவனித்த விமான பணிப்பெண்கள் அவரது சண்டையை நிறுத்த முயன்றனர். 


மனைவி மீது கடும் கோபத்தில் இருந்த மோங்கன் மனைவியின் முகத்தில் காரி துப்பிவிட்டார். இதையடுத்து சண்டை வேறு விதமாக திசை திரும்புவதை அறிந்த விமானப்பணி பெண்கள் உடனடியாக கேப்டனிடம் விஷயத்தை எடுத்து கூறினார். இதனால் மற்ற பயணிகளின் பாதுகாப்பு கருதி விமானி விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். அருகில் இருந்த பெர்முடா விமான நிலையத்தில் தரையிறக்கினார். 


அங்குள்ள போலீசாரிடம் நடந்ததை கூறி புகார் அளித்த பின்பு போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். கோர்ட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட கோங்கன் மன்னிப்பும் கோரினார். செய்த குற்றத்திற்காக அவருக்கு 5,250 பவுண்ட் அபராதம் விதித்து உத்தரவிட்டது. நடுவானில் விமானத்தில் கணவன், மனைவி சண்டையிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்பபடுத்தியது.