விநாயகர் சதுர்த்திக்கு மோதக நைவேத்தியம்! தொந்தி பிள்ளையாருக்கு ராகிக் கொழுக்கட்டை
Ganesh chathurthi Kollakattai: மோதகப் பிரியனுக்கு பிடித்த கொழுக்கட்டை செய்து படைப்பது விசேஷம் விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டையை இப்படி செய்து பாருங்க... செய்யறதும் சுலபம்... சுவையும் அபாரம்
விநாயகருக்கு பிடித்த பிரசித்தி பெற்ற உணவுகளில் கொழுக்கட்டையும் ஒன்று. அதிலும் புள்ளையார் சதுர்த்தி வந்தாலே, கொழுக்கட்டை செய்வது பற்றி பேச்சு அதிகமாகிவிடும். விநாயகருக்கு என படையலிட்டால், அதில் எப்பொழுதும் கொழுக்கட்டைக்கு முதலிடம் உண்டு.
கொழுக்கட்டை ஊட்டச்சத்துக்கள்
பாரம்பரிய முறைப்படி செய்யும் கொழுக்கட்டையில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற சத்துக்கள் அனைத்தும் உண்டு. தின்பண்டங்களை விரும்பி உண்பதால் தான் அவருக்கு தொந்திப் பிள்ளையார் என்ற பட்டப்பெயரும் வந்தது. விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள் பலரும் பலவிதமாக செய்து படைக்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தியும் கொழுக்கட்டையும்
சுலபமான சத்தான மற்றும் வித்தியாசமான கொழுக்கட்டையை செய்து இந்த விநாயகர் சதுர்த்திக்கு படைத்தால், கணபதியின் ஆசி என்றும் கிடைக்கும். கொழுக்கட்டைகளில், இனிப்பு கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை, மோதகம், வெல்ல கொழுக்கட்டை, பூரண கொழுக்கட்டை என பல வகை உண்டு.
சிறுதானிய விழிப்புணர்வு
தற்போது சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் என்ற விழிப்புணர்வு வந்திருப்பதால், சிறுதானியங்களைக் கொண்டும் கொழுக்கட்டை செய்து படைத்து, உண்டு மகிழலாம்.
மேலும் படிக்க | விநாயக சதுர்த்தி 2023: தேதி மற்றும் உகந்த நேரம்? விரதமுறைகள் முழு விவரம்
அரிசிக்கு பதிலாக சிறுதானியங்களை சேர்த்துக் கொண்டால் போதும். இன்று ராகிக் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்ளுங்கள். ராகிக்கு பதிலாக, குதிரைவாலி, சாமை மற்றும் வரகு என பிற தானியங்களிலு இதேபோல கொழுக்கட்டை செய்யலாம். பிள்ளையாருக்கு படைத்த பிறகு, வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவதால், இது ஆரோக்கியமான பிரசாதமாக இருக்கும்.
எந்த தானிய மாவாக இருந்தாலும் சரி, முதலில் அதை பாத்திரத்தில் போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
ராகி பூரண கொழுக்கட்டை
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளவும், அடுத்து 1 1/2 டீஸ்பூன் நெய் சேர்த்து கொள்ளுங்கள், அதன் பின்பு நெய் அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள் தண்ணீர் நன்றாக கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்தவுடன் அதில் ராகி மாவை சிறுது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.
அதன் பின்பு தண்ணீரின் அளவு அதிகமாக வற்றி விடாமல் மாவு தண்ணீர் பதத்துடன் இருக்கும் பொழுது பாத்திரத்தை இறக்கி விடுங்கள் இல்லை என்றால் மாவு இறுகி விடும். சூடு ஆறிய பின் மாவை எடுத்து கைகளால் நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள்.
கொழுக்கட்டையின் உட்புறம் வைக்கும் பூரணம் செய்வதற்கு, அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெல்லத்தை நன்றாக தூள் தூளாக உடைத்து அதனுடன் அரை கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும். வெல்லம் நன்றாக உருகி வந்ததும், நன்றாக வடிகட்டி விட்டு மீண்டும் பபத்திரத்தில் வைத்து கிண்டுங்கள்.
மேலும் படிக்க | ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய விநாயகர்: ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி!
அது நன்றாக பதம் வந்ததும், அதில் தேங்காய் துருவலையும் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். பூரணம் பதத்திற்கு வந்தவுடன் நாம் வைத்திருக்கும் மீதம் உள்ள நெய்யை உற்றி நன்றாக கிளறி விடுங்கள். தண்ணீர் வற்றி பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.
பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து உருண்டை பிடித்து எடுத்து கொள்ளுங்கள். அதன் பின்பு வாழை இலையில் எண்ணெய் தடவி மாவு உருண்டை அதில் வைத்து அழுத்தி தட்டையாக தட்டவும். வட்டமாக இருக்கும் மாவுக்குள் பூரணத்தை வைத்து உருண்டையாக பிடித்துக் கொள்ளுங்கள். இப்படி கொழுக்கட்டையை தயார் செய்து கொள்ளுங்கள்.
அதன் பின்பு இட்லி பாத்திரத்தில் அடியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விட்டு தண்ணீர் கொதித்த பின் இட்லி தட்டில் கொழுக்கட்டைகளை வைத்து 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.ராகி பூரண கொழுக்கட்டை ரெடி. பிள்ளையாருக்கு படைத்து மகிழவும். அவ்வளவுதான் பூரண கொழுக்கட்டை இனிதே தயாராகிவிட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ