விஷேச ஊசியால் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் நாட்டு மாடல் அழகி...
ஆப்பிரிக்க நாட்டு கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஆப்பிரிக்க பெண்களை போல் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் அழகி தற்போது மேலும் சில அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளார்!
ஆப்பிரிக்க நாட்டு கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஆப்பிரிக்க பெண்களை போல் கருமை நிறம் பெற்ற ஜெர்மன் அழகி தற்போது மேலும் சில அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளவுள்ளார்!
ஜெர்மன் நாட்டை சேர்ந்த மாடல் அழகி மார்டினா பிக். பிறப்பால் இளம்சிவப்பு நிறம் கொண்ட இவர் ஆப்பிரிக்கா நாட்டு கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு Melanin என்னும் ஊசி உதவியால் கருமை நிறம் பெற்றார். ஆப்பிரிக்கா நாட்டு பெண்களை போல் மாறவேண்டும் என கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஊசி செலுத்தி வரும் மார்டினா பிக், தனது மார்பக வளர்ச்சிக்காகவும் சில விசேஷ சிகிச்சைகளை பெற்றுக்கொண்டார்.
சமீபத்தில் தனக்கு பிறக்கும் குழந்தையையும் கருப்பின குழந்தைகள் போல் உருமாற்ற திட்டமிட்டு இருப்பதாவும், ஆனால் இந்த முடிவினை தனது மருத்துவருடன் கலந்து ஆலோசித்த பின்னரே செயல்படுத்துவேன் எனவும் தெரிவித்துள்ளார். இவரது கருத்திற்கு தற்போது கருப்பின பிரயர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.