மோடி அரசாங்கத்தின் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM) திட்டமானது முதலீட்டுப் பாதுகாப்போடு நியாயமான வருமானத்தை அளிக்கக்கூடிய திட்டமாகும். நாட்டின் அமைப்புசாராத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக மோடி அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் 2019 இல் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (Pradhan Mantri Shram Yogi Maan-dhan - PM-SYM) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் திருமணமான தம்பதிகள் மாதத்திற்கு ரூ. 200 வரை குறைவாக முதலீடு செய்து ஆண்டு வருமானம் ரூ.72,000 பெற உதவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM) திட்டம் என்றால் என்ன?


அமைப்புசாரா தொழிலாளர்கள் பெரும்பாலும் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், மதிய உணவுத் தொழிலாளர்கள், தலை சுமை தூக்குபவர்கள், செங்கல் சூளைத் தொழிலாளர்கள், செருப்புத் தொழிலாளிகள், கந்தல் எடுப்பவர்கள், வீட்டுப் பணியாளர்கள், துவைப்பவர்கள், ரிக்ஷாக்காரர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், சொந்தக் கணக்குத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், கைத்தறித் தொழிலாளர்கள், தோல் தொழிலாளர்கள், மற்றும் மாத வருமானம் ரூ. 15,000/ அல்லது அதற்கும் குறைவாக உள்ள மற்றும் 18-40 வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்.


அவர்கள் புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS), ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகம் (ESIC) திட்டம் அல்லது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆகியவற்றின் கீழ் இருக்கக்கூடாது. மேலும், அவர்/அவள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது.


பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM) திட்டத்தின் கீழ் திருமணமான தம்பதிகள் ஆண்டுக்கு 72,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறுவது எப்படி?


தமபதிகள் ஆண்டுக்கு 72,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள எளிய கணக்கீடு உள்ளது. உதாரணமாக, ஒரு நபருக்கு 30 வயது இருந்தால், திட்டங்களில் மாதாந்திர பங்களிப்பு மாதத்திற்கு சுமார் ரூ. 100 ஆக இருக்கும் - ஒரு தம்பதியினர் மாதத்திற்கு ரூ.200 செலவிடுகிறார்கள். எனவே, தனிநபர் பங்களிப்பு ஒரு வருடத்தில் ரூ. 1200 ஆக இருக்கும், 60 வயதை எட்டிய பிறகு, தனிநபர் ஓய்வூதியமாக ஆண்டுக்கு ரூ. 36,000 (தம்பதிகளுக்கு ரூ. 72,000 ஆண்டு ஓய்வூதியம்) பெறுவார்.


மேலும் படிக்க | ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்கவில்லையா? வருமான வரித்துறை என்ன சொல்கிறது


பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?


குறைந்தபட்ச உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்: PM-SYM-ன் கீழ் உள்ள ஒவ்வொரு சந்தாதாரரும், 60 வயதை அடைந்த பிறகு, குறைந்தபட்சம் 3000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறுவார்கள்.


குடும்ப ஓய்வூதியம்


ஓய்வூதியம் பெறும் போது, சந்தாதாரர் இறந்தால், பயனாளியின் மனைவி, பயனாளி பெறும் ஓய்வூதியத்தில் 50% குடும்ப ஓய்வூதியமாகப் பெற உரிமை உண்டு. குடும்ப ஓய்வூதியம் மனைவிக்கு மட்டுமே பொருந்தும்.


பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM) திட்டத்தில் சேருவது எப்படி?


சந்தாதாரர் மொபைல் போன், சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். தகுதியான சந்தாதாரர் அருகிலுள்ள CSC களுக்குச் சென்று, ஆதார் எண் மற்றும் சேமிப்பு வங்கிக் கணக்கு/ ஜன்-தன் கணக்கு எண்ணைப் பயன்படுத்தி சுய சான்றிதழின் அடிப்படையில் PM-SYM-க்கு பதிவு செய்யலாம்.


மேலும் படிக்க | ITR Filing அலர்ட்: ஐடிஆர் தாக்கல் விதிகளில் இந்த ஆண்டு 5 பெரிய மாற்றங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ