இந்த ராசிக்கார பெண்கள் கணவனை அடக்கி ஆள்வார்கள்: உங்க மனைவிக்கு இந்த ராசியா?
ஒரு நபரின் இயல்புக்கு பின்னால், அவரது ராசிக்கான இயல்புகளும் காரணமாக அமைகின்றன.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். பெரும்பாலும் ஜாதக பொருத்தம் பார்த்து திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. ஜாதகங்கள் பொருந்தினாலும், சில சமயம் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்களும், சண்டைகளும் வருவதுண்டு.
இந்த நிலை, கணவன் மனைவியின் தனிப்பட்ட சுபாவத்தாலும், குணத்தாலும், இயல்பாலும், அவற்றில் உள்ள சில குறைபாடுகளாலும் கூட ஏற்படலாம். ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் (Zodiac Signs) உள்ள நல்ல மற்றும் தீய குணங்கள் மற்றும் இயல்புகள் பற்றி கூறப்பட்டுள்ளன.
அதாவது, ஒரு நபரின் இயல்புக்கு பின்னால், அவரது ராசிக்கான இயல்புகளும் காரணமாக அமைகின்றன. இந்த பதிவில், அதிகமாக கோவப்படும், கணவன் மீது தன் கட்டுப்பாட்டை வைத்திருக்க ஆசைப்படும் பெண்களைப் பற்றி காணலாம்.
இந்த ராசிகளில் உள்ள பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் இயல்புடையவர்கள்
மேஷம் (Aries): மேஷ (Aries) ராசிப் பெண்கள் பயமற்றவர்களாகவும் தைரியசாலிகளாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு தைரியத்துடன் கோவமும் சற்று அதிகமாகவே இருக்கும். இவர்கள் எளிதில் யாருடைய பேச்சையும் கேட்க மாட்டார்கள். இவர்களது வாழ்க்கைத் துணையை இந்த பெண்கள் வாழ்நாள் முழுவதும் அடக்கி ஆள்வார்கள்.
ALSO READ | MARS TRANSIT: இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட அலை வீசப்போகிறது
சிம்மம் (Leo): சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் வலிமையாகவும், உறுதியான நம்பிக்கையுடனும் இருப்பார்கள். இவர்கள் தங்கள் கருத்தை மிகவும் வலுவாக எடுத்து வைப்பதில் வல்லவர்கள். இந்த ராசி பெண்களின் இந்த குணம் அவர்களது கணவன் மீது அவர்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த அவர்களுக்கு உதவுகிறது. இவர்கள் முன்னால் கணவனின் பேச்சு எடுபடாது. தாங்கள் நினைத்ததை இந்த பெண்கள் சாத்தித்தே தீருவார்கள்.
கன்னி (Virgo): கன்னி ராசியில் உள்ளபெண்கள் மிகச்சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் கணவனை நன்றாக கவனித்துக்கொள்வார்கள். அளவு கடந்த அன்பைப் பொழிவார்கள். ஆனால் அனைத்து விஷயங்களிலும், இவர்கள் தங்கள் கணவனின் விருப்பத்துக்கு முன்னால், தங்கள் விருப்பத்துக்கே முன்னுரிமை கொடுப்பார்கள். இந்த விஷயத்தில் இவர்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் நபர்களாகவும் இருப்பார்கள்.
மகரம் (Capricorn): மகர (Capricorn) ராசி பெண்கள் கணவனாகட்டும், காதலனாகட்டும், இவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். தாங்கள் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என முயற்சி செய்வார்கள். அனைத்து விஷயங்களையும் தங்களுக்கு சாதகமான வழியிலேயே நடத்திக்கொள்வதில் வல்லவர்கள் இந்த பெண்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ‘4’ ராசிகளுக்கு இந்த புத்தாண்டு ஜாக்பாட் தான்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR