வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? புதிய விதிகள் அமலுக்கு வந்தன, விவரம் இதோ
Gold Limit at Home: இந்தியாவில் ஒருவர் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச தங்கத்தின் அளவு எவ்வளவு தெரியுமா?
தங்கத்திற்கான வழிகாட்டுதல்கள்: தங்கம் என்பது ஒரு உலோகம் மட்டுமல்ல. இந்திய மக்களுக்கு இது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமாகும். இது ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதோடு, குடும்பங்களின் மகிழ்ச்சிக்கும் இது காரணமாகின்றது. நம் நாட்டில் பண்டிகை நாட்களில் தங்கம் வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
தங்கம் வாங்கும் திறன் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் அதன் விலை குறையும் போது நாம் மகிழ்ச்சி அடைகிறோம். எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் குடும்பத்தின் நிதி சவால்களை சமாளிக்க இது பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஒரு முதலீட்டு விருப்பமாக, தங்கத்தை நாணயங்கள், பார்கள், நகைகள் அல்லது காகித வடிவில் அல்லது தங்க பரிமாற்ற-வர்த்தக நிதிகள் (தங்க ஈடிஎஃப்), இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய சோவரின் தங்கப் பத்திரங்கள் (எஸ்ஜிபி) மற்றும் தங்க மியூசுவல் ஃபண்டுகள் போன்ற வடிவங்களில் நாம் சேர்க்கிறோம்.
தங்கத்தை நாம் பல வழிகளில் வாங்கலாம் என்பது நமக்குத் தெரியும். ஆனால், இந்தியாவில் ஒருவர் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச தங்கத்தின் அளவு எவ்வளவு தெரியுமா? பெரும்பாலான இந்திய குடும்பங்கள் தங்கத்தை வாங்கி சொந்தமாக வைத்திருக்கிறார்கள். எனினும், அவர்கள் எவ்வளவு தங்கத்தை வைத்திருக்க முடியும் என்பதற்கான சட்ட வரம்புகளை அவர்கள் அறிந்திருப்பதில்லை. நமது நாட்டில் 1968ஆம் ஆண்டு தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தச் சட்டம் குடிமக்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் வைத்திருப்பதைத் தடை செய்தது. இருப்பினும், இந்த சட்டம் 1990 இல் ரத்து செய்யப்பட்டது. தற்போது இந்தியாவில் தங்கத்தின் அளவிற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் தங்கம் வைத்திருப்பவர் சரியான ஆதாரம் மற்றும் தங்கம் தொடர்பான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வரம்புகள்
வருமான வரி சோதனையின் போது சொத்துக்களைக் கைப்பற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இது சில வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த அறிவுறுத்தல்களின்படி, நபரின் பாலினம் மற்றும் திருமண நிலை ஆகியவற்றின் அடிப்படையில் நகைகளை ஒரு குறிப்பிட்ட அளவு வரை பறிமுதல் செய்ய முடியாது.
நீங்கள் எத்தனை ஆபரணங்களை வைத்திருக்க முடியும்?
திருமணமான பெண் 500 கிராம் வரை தங்க ஆபரணங்களையும், திருமணமாகாத பெண்கள் 250 கிராம் வரையிலான தங்க ஆபரணங்களையும் அதற்கான ஆவணங்கள் இல்லாமல் வைத்திருக்கலாம். ஆண்களை பொறுத்தவரையில், CBDT குடும்பத்தின் ஒவ்வொரு ஆண் உறுப்பினருக்கும், அவர்களின் திருமண நிலை எப்படி இருந்தாலும், 100 கிராம் என்ற வரம்பை நிர்ணயித்துள்ளது. இந்த அளவு வரை வருமான வரித்துறையினரின் சோதனையின் போதும் தங்கத்தை பறிமுதல் செய்ய முடியாது.
மேலும் படிக்க | 7th Pay Commission: விரைவில் 50% டிஏ, ஊழியர்களின் ஊதியம் அதிரடி ஏற்றம் காணும்
அதாவது தங்கத்தை வைத்திருப்பதற்கான சரியான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் உங்களிடம் இருந்தால், இதற்கு வரம்பு இல்லை. ஆனால் இந்த விதிகள் வரி செலுத்துவோர் சோதனையின் போது அவர்களின் நகைகளை பறிமுதல் செய்வதிலிருந்து விடுவிக்க மட்டுமே செய்யப்பட்டுள்ளன.
தங்கத்தின் மீதான வரி விதிகள் என்ன?
தங்க முதலீட்டின் மீதான வரி நிர்ணயம், வைத்திருக்கும் காலம், அதாவது வரி செலுத்துவோர் வைத்திருக்கும் காலத்தைப் பொறுத்தது. தங்கத்தை 3 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்தால், நீண்ட கால மூலதன ஆதாயமாக (LTCG) 20 சதவீதம் (எசுகேஷன் செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் தவிர்த்து) மற்றும் முதலீட்டாளருக்குப் பொருந்தும் குறுகிய கால மூலதன ஆதாயமாக வரி விதிக்கப்படும். பிசிக்கல் தங்கத்தை போலவே கோல்ட் இடிஎஃப் / கோல்ட் எம்ஃப் ஆகியவற்றுக்கும் வரி விதிக்கப்படும்.
அதேசமயம், பத்திரங்களை பொறுத்த வரை, அவற்றை முதிர்வு வரை (மெச்யூரிட்டி வரை) வைத்திருந்தால், அவற்றுக்கு வரிவிலக்கு உண்டு. இருப்பினும், பிசிக்கல் தங்கம் அல்லது இடிஎஃப் அல்லது கோல்ட் எம்ஃஅப் ஆகியவற்றின் பரிவர்த்தனைகளில் மூலதன ஆதாயங்கள் செலுத்தப்பட வேண்டும். பத்திரங்கள் பங்குச்சந்தைகளில் டீமேட் வடிவத்தில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இவற்றை ஐந்தாவது வருடத்திற்குப் பிறகு ரெடீம் செய்து கொள்ளலாம். முதிர்வுக்கு முன் பத்திரம் விற்கப்பட்டால், அதற்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும்.
மேலும் படிக்க | வங்கி லாக்கர் விதிகள் குறித்து முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ