வங்கி லாக்கர் விதிகள் குறித்து முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை!

பெரும்பாலானோர் தங்களிடம் உள்ள நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடு போகாமல் பாதுகாப்பாக வைக்க வங்கியில் கிடைக்கும் லாக்கர் வசதியை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் வசதியை வழங்குகிறது. 

வங்கிகள் வழங்கும் லாக்கரில் வாடிக்கையாளர் அவர் விரும்பு அனைத்து பொருட்களையும் வைத்து கொள்ளலாம். தங்கம், வைரம், ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய பல பொருட்களை வைக்கலாம். லாக்கரில் வைக்கப்படும் பொருட்களின் விவரங்கள் எதையும் வங்கிகள் கேட்பதில்லை. ஆனால் இந்த லாக்கரில் ரொக்க பணத்தை வைக்கக்கூடாது என வங்கிகள் கட்டுப்பாடு வைத்துள்ளது.

 

1 /5

நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடு போகாமல் பாதுகாப்பாக வைக்க வங்கியில் கிடைக்கும் லாக்கர் வசதி பெரிதும் உபயோகமாக உள்ளது எனலாம். வங்கிகள் வழங்கும் லாக்கரில் வாடிக்கையாளர் அவர் விரும்பு அனைத்து பொருட்களையும் வைத்து கொள்ளலாம். தங்கம், வைரம், ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய பல பொருட்களை வைக்கலாம்.

2 /5

வங்கிகள் வழங்கும் லாக்கர் சேவைக்கு வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்த வாடகை ஒவ்வொரு வங்கிக்கும் வித்தியாசப்படும். அந்த வாடகை ஆண்டுக்கு ஒருமுறை வசூலிக்கப்படும். வங்கிகளுக்கான லாக்கர் வாடகை பராமரிப்பு கட்டணம் என அனைத்தும் சேர்த்து 6,000 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

3 /5

வங்கி லாக்கரில் வைக்கப்படும் பொருட்களுக்கு வாடிக்கையாளர் மட்டுமே பொறுப்பு. லாக்கரில் பாதுகாப்படும் பொருட்களின் விவரங்கள் எதையும் வங்கி கேட்பதில்லை. மேலும் வங்கியை பொறுத்தவரை லாக்கர் என்பது வாடிக்கையாளர்களுக்கு இடம் கொடுப்பது மட்டுமே.   

4 /5

லாக்கர்கள் இருக்கும் அறைக்கு சிசிடிவி பொருத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. லாக்கரில் வைக்கப்படும் விலைமதிப்பற்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டாலோ அல்லது தீ விபத்து, கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஆகியவற்றால் பாதிக்கப்பட்டாலோ, லாக்கருக்கான வங்கிக் கட்டணத்தை விட 100 மடங்கு வரை வங்கி வாடிக்கையாளர்கள் பெறலாம்.

5 /5

வங்கியில் லாக்கர் வாடகைக்கும் எடுத்து, பொருட்களை வைத்துள்ள நிலையில், குறிப்பிட்ட வாடிக்கையாளர், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வாடகை செலுத்தவில்லை என்றால், அந்த லாக்கரை உடைக்க வங்கிக்கு அதிகாரம் உண்டு