Gold rates today, 5 August, 2021: கொரோனா தொற்று நமது வாழ்வின் பலவித அம்சங்களையும் மாற்றியுள்ளது. எனினும், பெரும் மாற்றம் ஏற்படாத ஒரு சில விஷயங்களில் தங்க முதலீடும் ஒன்றாகும். உலகளவில் பொருளாதாரத்தில் நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், பாண்டுகள் என இருந்த தங்கள் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.


இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (Gold Rate) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.36,208-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,526-க்கு விற்பனை ஆகிறது. 


சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றத்தில் இருந்தது. இன்று தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சியைக் காண முடிகிறது. தங்கத்தில் தொடர்ந்து பலவித ஏற்ற இறக்கங்களைக் காண முடிகின்றது. 


ALSO READ: Caution: தங்கத்தை ஆன்லைனில் வாங்கினால் இந்த விஷயங்களை கவனத்தில் வைக்கவும்


வெள்ளியின் விலையிலும் (Silver Rate) இன்று சிறிய வீழ்ச்சியைக் காண முடிகிறது. இன்று காலை நிலவரப்படி வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ. 73.30-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 73,300 என்ற விலையில் விற்பனையில் உள்ளது. 


தேசிய அளவில் தங்கத்தின் விலை பற்றி பல ஊகங்கள் உள்ளன. எனினும், Quadriga Igneo fund என்ற நிதி மேல்லாண்மை நிறுவனத்தின் மேலாளர் டியாகோ பாரிலாவின் கணிப்பு பரபரப்பை உருவாக்கியுள்ளது. அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,000-5,000 டாலராக உயரும் என்று அவர் கணித்துள்ளார். தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோரது ஆர்வத்தை இது அதிகரித்துள்ளது.


உலகளாவிய சந்தைகளில் (International Markets) நேர்மறையான அணுகுமுறை உள்ளதாலும், தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். 


பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி (Tax) வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை மாறுபடுகிறது. மேலும், செய்கூலி மற்றும் சேதாரத்தின் அடிப்படையில் கடைக்கு கடை தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும்.


ALSO READ: Incredible Dress! 100 கிலோ தங்கத்தால் நெய்யப்பட்ட அற்புத திருமண ஆடை; வீடியோ வைரல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR