ஜோதிட சாஸ்திரத்தில் சூரிய பகவானுக்கு தனி இடம் உண்டு. சூரியன் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரியன் சுப பலன்களை தரும் போது, அதன் தாக்கத்தில் இருக்கும் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். இப்போது சூரிய பகவான் மேஷ ராசியில் இருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசி-யை மாற்றுகிறார். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சூரியன் மேஷ ராசியில் தங்கி சில ராசிக்காரர்களுக்குச் சிறப்புச் செய்கிறார். மே 14 வரை சூரியன் மேஷ ராசியில் இருப்பார். அதன் பிறகு சூரியன் ரிஷப ராசிக்குள் நுழைவார். சூரியன் மேஷ ராசியில் இருக்கும்போது எந்தெந்த ராசிகளுக்கு விசேஷ அனுக்கிரகம் செய்கிறார் என்பதை தெரிந்து கொள்வோம்.


மேஷம்:


சொத்து மூலம் வருமானம் அதிகரிக்கும். தாயிடமிருந்து பணம் வரக்கூடும். கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும். பணியிட மாற்றம், இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வருமானம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். 


கடகம்: 


கடக ராசிக்கார்ரகளுக்கு மனதில் நம்பிக்கையும் உறுதியும் அதிகரிக்கும். குடும்பத்தில் சமய நிகழ்ச்சிகளும் ஆன்மீக நிகழ்ச்சிகளும் நடைபெறும். குழந்தைகளினால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர்கல்வி, ஆராய்ச்சி போன்றவற்றிற்காக வெளிநாட்டுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.


பணியிடத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த மாற்றத்தால் பல ஆதாயங்கள் ஏற்படும். மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் தாய் மற்றும் தந்தை மூலம் பண வரவுக்கான வாய்ப்புகள் இருக்கும். 


மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் தேடி வரும் 


சிம்மம்:


மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆடை முதலியவற்றின் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். படிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் மகிழ்ச்சியான முடிவுகள் கிடைக்கும். 


குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வீட்டில் ஆன்மீக காரியங்கள் நடைபெறலாம். ஆன்மீகப் பயணம் செல்வதற்கான யோகமும் கிடைக்கும். 


மீனம்:


மீன ராசிக்காரர்களின் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். கல்விப் பணிகளில் மகிழ்ச்சியான முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இடமாற்றம் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வாங்க எண்ணம் கொண்டிருந்த சொத்தை வாங்குவீர்கள். 


பணியிடத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். பண வரவு அதிகரிக்கும். பணியிட மாற்றம் ஏற்படலாம். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சனி பெயர்ச்சி 2022: சனியால் யாருக்கு கஷ்டம், விடுபட இதுதான் பரிகாரம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR