இந்த ராசிக்காரர்களுக்கு அடித்தது யோகம்: குருவும் சுக்கிரனும் சேர்ந்து நன்மை செய்வார்கள்

Astrology: இந்த கிரகங்களின் இணைப்பின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இருப்பினும் இந்த இணைப்பு 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களை அளிக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 19, 2022, 06:35 PM IST
  • சுக்ரன் மற்றும் வியாழனின் இந்தச் சேர்க்கை மிதுன ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றத்தைத் தரும்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன்-குரு இணைவதால் வருமானம் அதிகரிக்கும்.
  • வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலை வலுப்பெறும்.
இந்த ராசிக்காரர்களுக்கு அடித்தது யோகம்: குருவும் சுக்கிரனும் சேர்ந்து நன்மை செய்வார்கள் title=

ஜோதிட சாஸ்திரத்தில் சுக்ரன் மற்றும் வியாழன் மிகவும் முக்கியமான கிரகங்களாக கருதப்படுகின்றன. ஏனெனில் சுக்கிரன் செல்வத்தை அளிப்பவர். மறுபுறம், வியாழன் கிரகம் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் கிரகமாகும். இவை இரண்டின் அருட்பார்வை ஒரு மனிதனுக்கு கிடைத்தால், அவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவது நிச்சயம்.

இப்போது இந்த இரண்டு சுப கிரகங்களும் இணையப் போகின்றன. இந்த கிரகங்களின் இணைப்பின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இருப்பினும் இந்த இணைப்பு 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களை அளிக்கும். 

சுக்ரன் மற்றும் குருவின் இணப்பு மீன ராசியில் நடக்கும். ஏப்ரல் 27 ஆம் தேதி, சுக்கிரன் மீனத்தில் நுழைகிறார். குரு ஏற்கனவே மீன ராசியில்  உள்ளார். இரு கிரகங்களும் மே 23 வரை இதே நிலையில் இருக்கும். அதுவரை இந்த 3 ராசிக்காரர்களுக்கும் வெற்றியை அள்ளிக்கொடுப்பார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் உண்டாகும்

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன்-குரு இணைவதால் வருமானம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலை வலுப்பெறும். கடன் தொல்லைகள் நீங்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். ஆடம்பர வாழ்க்கையை அனுபவியுங்கள்.

மேலும் படிக்க | Solar Eclipse: இந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளால் மகிழ்ச்சியடைவீர்கள். சொந்தங்களால் சந்தோஷம் அதிகரிக்கும்.

மிதுனம்:

சுக்ரன் மற்றும் வியாழனின் இந்தச் சேர்க்கை மிதுன ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றத்தைத் தரும். புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மேலதிகாரியின் பாராட்டுக்கள் கிடைக்கும்.

நீண்ட நாட்களாக நீங்கள் செய்யதிட்டமிட்டிருந்த பணிகள் நடக்கும். வெளி நாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பு பல லாபங்களை தேடித்தரும். 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு வியாழன், சுக்கிரன் சேர்க்கையால் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வெளிநாட்டில் இருந்தும் பண வரவு இருக்கும். வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் இந்த காலத்தில் அதிகமாக இருக்கும். தேர்வுகள், நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொள்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மே மாதம் இந்த 3 ராசியினரின் அதிர்ஷ்டம் மின்னும், தொட்டது துலங்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News