Solar Eclipse: இந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

ஏப்ரல் 30 சூரிய கிரகணம். இதற்கு ஒரு நாள் முன்னதாக ஏப்ரல் 29ஆம் தேதி சனி பெயர்ச்சியாகி கும்ப ராசிக்குள் நுழைகிறார். எனவே, இந்த கிரகணம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 19, 2022, 04:31 PM IST
Solar Eclipse: இந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் title=

2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 அன்று நடக்க உள்ளது. இது பகுதி சூரிய கிரகணமாக இருந்தாலும், இந்த கிரகணத்தின் தாக்கம் மற்றும் பலன்கள் 12 ராசிகளுக்கும் இருக்கும். இந்த நாளில், சனி சாரி அமாவாசை மற்றும் கிரகணத்திற்கு ஒரு நாள் முன்னதாக, ஏப்ரல் 29 அன்று சனியின் ராசி மாறுகிறது. இதனால், இந்த கிரகணத்தின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் - சூரிய கிரகணத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்படும். இந்த நாளில் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்கவும்.

ரிஷபம் - சூரிய கிரகணம் ரிஷப ராசிக்காரர்களின் நம்பிக்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். நீங்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.

மேலும் படிக்க | Solar Eclipse 2022: சூரிய கிரகணத்தின் போது மறந்தும் கூட இவற்றை செய்யாதீர்கள்

மிதுனம் - மிதுனம் ராசிக்காரர்கள்  மிகவும் கவனமாக இருக்க வேண்டும் இல்லையெனில் நஷ்டம் வரலாம். இந்த நாளில் வீட்டிலேயே இருப்பது நல்லது அல்லது குறைந்த பட்சம் நெரிசலான இடங்களுக்குச் செல்லாமல் இருப்பது நல்லது.

கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் நல்ல பலன் தரும். பணம் சாதகமாக இருக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

சிம்மம் - சூரிய கிரகணம் சிம்ம ராசிக்காரர்களுக்கும் நல்லது. பணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும், ஆனால் தேவையற்ற செலவுகள் மற்றும் முதலீடுகளை தவிர்க்கவும்.

கன்னி - கன்னி ராசிக்காரர்கள் கடின உழைப்பின் முழு பலனைப் பெற மாட்டார்கள், இருப்பினும் பொறுமையுடன் நேரத்தை செலவிடவும். தொழில் மாற்றங்களைத் தவிர்க்கவும்.

துலாம் - சூரிய கிரகணம் துலாம் ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். சர்ச்சைகளில் இருந்து விலகி இருங்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.

மேலும் படிக்க | Personality by Zodiac Sign: வெறுப்பு, பகை குணம் இல்லாத '3' ராசிக்காரர்கள்..!!

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களின் தொழிலுக்கு நேரம் சரியாக இருக்காது. இந்த நேரத்தை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை கண்ணியமாக செயல் படுங்கள்.

தனுசு  - தனுசு ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் - பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிரிகள் மீது வெற்றி உண்டாகும்.

மகரம் - மகர ராசிக்காரர்கள் கெட்ட பழக்கங்களிலிருந்து விலகி இருங்கள், இல்லையெனில் நீங்கள் பெரிய சேதத்தை ஏற்படுத்துவீர்கள். குழந்தைகள் மீது கவனம் தேவை.

கும்பம் - சூரிய கிரகணம் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்லது என்று சொல்ல முடியாது. முதலீட்டில் நஷ்டம், குடும்பத்தில் தகராறு, வேலையில் தோல்வி ஏற்படலாம். அவசரத்தைத் தவிர்க்கவும்.

மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் நன்றாக இருக்கும். பணம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். மரியாதை அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: அனைவரையும் காந்தம் போல் வசீகரிக்கும் திறன் பெற்ற ‘3’ ராசிக்காரர்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News