புதுடெல்லி: நீங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளியாக இருந்தாலோ அல்லது விரைவில் அதில் பதிவு செய்யப்போகிறீர்கள் என்றாலோ, மோடி அரசு உங்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. மோடி அரசு இப்போது உரிம அட்டையை (Entitlement Card) இலவசமாக்கியுள்ளது.  முன்பு இதற்கு 30 ரூபாய் வசூலிக்கப்பட்டது. மோடி அரசாங்கத்தின் இந்த முடிவு ஏழைக் குடும்பங்களுக்கு பெரிய நிவாரணத்தை வழங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது ஆயுஷ்மான் அட்டையை பெறுவது எப்படி


தற்போதுள்ள வழிமுறை படி, ஆயுஷ்மான் திட்டத்தின் பயனாளிகள் தகுதி அட்டைக்கான பொது சேவை மையங்களை (CSC) தொடர்பு கொள்ள வேண்டும். கிராமப்புற ஆபரேட்டரிடம் ரூ .30 செலுத்திய பின்னர் அட்டை கிடைக்கும். இப்போது புதிய முறையின் கீழ் முதல் முறையாக, அட்டையை பெறுவது இலவசமாக்கப்பட்டுள்ளது.


ஆனால் பயனாளி நகல் அட்டையை பெறவோ அல்லது அட்டையை மறுபதிப்பு செய்யவோ ரூ .15 செலுத்த வேண்டும். பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்குப் பிறகு இந்த அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.


NHA மற்றும் CSC இல் ஒப்பந்தம்


ஒரு பெரிய ஒப்பந்தத்திற்கு பின்னர் மோடி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் தேசிய சுகாதார ஆணையம் (NHA) மற்றும் CSC ஆகியவற்றுக்கு இடையில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அதன் பிறகு புதிய விதிகள் செயல்படுத்தப்படுகின்றன. NHA ஒரு அரசாங்க நிறுவனமாகும். இது இந்த திட்டத்தின் நிர்வாகத்தை கவனிக்கிறது. CSC அதன் ப்ரொடெக்ஷன் பணிகளைக் கையாளும் ஒரு தனியார் நிறுவனமாகும்.


ALSO READ: Jammu Kashmir-ல் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி


ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) அட்டை வழங்கப்படும் போது என்.எச்.ஏ முதல் முறை சி.எஸ்.சிக்கு 20 ரூபாய் செலுத்தும். இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ், PVC ஆயுஷ்மான் அட்டைகளை தயாரிப்பதாகும். இது தவிர, திட்டத்தின் கீழ் இந்த அமைப்பை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளும் உள்ளது.


பயனாளிகளுக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும்


ஆயுஷ்மான் திட்டத்தைப் பயன்படுத்த PVC அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக இருக்காது என்று NHA தலைமை நிர்வாக அதிகாரி ராம்சேவக் சர்மா தெரிவித்துள்ளார். பழைய அட்டைகளை வைத்திருக்கும் பயனாளிகளுக்கும் இந்த திட்டத்தின் நன்மை கிடைக்கும். சுகாதார அதிகாரிகள் PVC கார்டுகள் மூலம் பயனாளிகளை அடையாளம் காண முடியும். மேலும், தேவையில் இருக்கும் பயனாளிகள் எந்தவிதமான மோசடியும் இல்லாமல் சுகாதார சேவைகளைப் பெற முடியும்.


ஆயுஷ்மான் பாரத் திட்டம்


ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மோடி அரசு (Modi Government) 2017 இல் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பங்களுக்கு ரூ .5 லட்சம் வரை இலவச சிகிச்சை கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடி 63 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆயுஷ்மான் அட்டை வைத்திருக்கும் பயனாளிகள் எந்தவொரு தனியார் மருத்துவமனையிலும் தேவைக்கேற்ப சிகிச்சை பெறலாம் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.


ALSO READ: ஆயுஷ்மான் பாரத்: ஏழைகளுக்கு மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்துக்கும் ஆபத்பாந்தவன் தான்..!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR