புதுடில்லி: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் அனைவருக்குமான நன்மைகளையும் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சனிக்கிழமை (டிசம்பர் 26) ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தை அங்கு தொடக்கி வைத்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஜம்மு காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ஆகியோரும் இந்த மெய்நிகர் நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த திட்டம் உலகளாவிய சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதோடு, நிதி ஆபத்து பாதுகாப்பை வழங்குவதிலும், அனைத்து தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் தரமான மற்றும் மலிவான அத்தியாவசிய சுகாதார சேவைகளை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தும்.
இந்த திட்டம் ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) யூனியன் பிரதேசத்தின் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் இலவசமாக காப்பீட்டுத் தொகையை வழங்குகிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் அனைத்து மக்களுக்கும் ஒரு மிதவை அடிப்படையில் ஒரு குடும்பத்திற்கு ரூ .5 லட்சம் வரை நிதி வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் PM-JAY உடன் இணைந்து காப்பீட்டு முறையில் செயல்படும். இத்திட்டத்தின் நன்மைகள் நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பெறக்கூடிய வகையில் இருக்கும். PM-JAY திட்டத்தின் கீழ் எம்பனேல் செய்யப்பட்ட மருத்துவமனைகள் இந்த திட்டத்தின் கீழ் சேவைகளை வழங்கும்.
உணவு பதப்படுத்தும் துறையில் ஏற்படும் முன்னேற்றங்களால், ஜம்மு காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பு பெறப் போகிறார்கள், சுயதொழில் செய்யப் போகிறார்கள் என்று பிரதமர் மோடி (PM Modi) கூறியுள்ளார்.
ALSO READ: இந்த 10 விதிகளும் ஜனவரி 1 முதல் மாறும், இவை நேரடியாக உங்கள் பாக்கெட்டை பாதிக்கும்!!
ஆப்பிள்களை சேமித்து வைப்பதற்கு அரசாங்கம் அளித்து வரும் உதவிகளால் விவசாயிகளும் பெரிதும் பயனடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் புதிய விவசாயிகள் உற்பத்தியாளர் சங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளையும் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பிரிவுகளில் இரண்டு புற்றுநோய் நிறுவனங்கள் கட்டப்படுகின்றன. இரண்டு AIIMS மருத்துவமனைகளின் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. ஜம்மு-காஷ்மீரில் இளைஞர்கள் மனநல மற்றும் துணை மருத்துவக் கல்விக்கான அதிகபட்ச வாய்ப்புகளைப் பெறுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.
ஜம்மு-காஷ்மீருக்கு 7 புதிய மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் MBBS இடங்கள் இரண்டு முறைக்கு மேல் ஒதுக்கப்படும். ஒப்புதல் அளிக்கப்பட்ட 15 புதிய நர்சிங் கல்லூரிகள் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் என்று பிரதமர் மோடி மேலும் கூறினார்.
பல வித மக்கள் நல பணிகள் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கனவுகள் ஒவ்வொன்றாக நிஜமாகத் தொடங்கியுள்ளன.
ALSO READ: விவசாயிகளை சமாதானப்படுத்த ₹.18000 கோடி நிதியை வழங்கியை வழங்கிய பிரதமர்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR