புது தில்லி: எஸ்பிஐ மற்றும் இண்டஸ் இண்ட் வங்கிகளைத் தொடர்ந்து, இப்போது ஆக்சிஸ் வங்கியும் அதன் நிலையான வைப்பின் (எஃப்டி) வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. புதிய கட்டணங்கள் 17 மார்ச் 2022 முதல் அமலுக்கு வந்துள்ளன. வங்கி 2 கோடி ரூபாய்க்கும் குறைவான தொகையுள்ள எஃப்டி-களுக்கு 2.50 சதவீத வட்டியை குறுகிய காலத்திற்கு அதாவது 7-14 நாட்களுக்கு வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய விகிதங்கள் ரூ. 2 கோடிக்கும் குறைவான எஃப்டி-களுக்கு பொருந்தும். இந்த மாற்றத்திற்குப் பிறகு, 18 மாதங்களுக்கும் மேலான மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு குறைவான கால வைப்புகளுக்கு வங்கி 5.25 சதவீத வட்டியை வழங்கும். இது தவிர, ஆக்சிஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு 7-14 நாட்களுக்கு 2 கோடி ரூபாய்க்கும் குறைவான எஃப்டிகளுக்கு 2.90 சதவீத வட்டியை வழங்குகிறது.


எந்த கால அளவிற்கு எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்:


- 15-29 நாட்கள் - பொதுவான விகிதம் - 2.50 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 2.90 சதவீதம்
- 30-45 நாட்கள் - பொதுவான விகிதம் - 3 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
- 46-60 நாட்கள் - பொதுவான விகிதம் - 3 சதவீதம்,  மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
- 61-90 நாட்கள் - பொதுவான விகிதம் - 3 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
- 91-120 நாட்கள் - பொதுவான விகிதம் - 3.50 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 4 சதவீதம்
- 6 மாதங்கள் ஒரு நாள் முதல் 9 மாதங்கள் - பொதுவான விகிதம் - 4.40 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 4.90 சதவீதம்


மேலும் படிக்க | ஏப்ரல் மாதத்தில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை 


- 9 மாதங்கள் ஒரு நாள் முதல் ஒரு வருடத்திற்கு குறைவாக - பொதுவான விகிதம் - 4.40 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 4.90 சதவீதம்
- ஓராண்டு - பொதுவான விகிதம் - 4.40 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 4.90 சதவீதம்
- ஒரு வருடம் ஒரு நாள் முதல் 2 ஆண்டுகள் வரை - பொதுவான விகிதம் - 5.10 சதவீதம்,  மூத்த குடிமக்களுக்கு - 5.60 சதவீதம்
- இரண்டு ஆண்டுகள் ஒரு நாள் முதல் 3 ஆண்டுகள் வரை - பொதுவான விகிதம் - 5.10 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 5.60 சதவீதம்
- மூன்று ஆண்டுகள் ஒரு நாள் முதல் 5 ஆண்டுகள் வரை - பொதுவான விகிதம் - 5.45 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு - 5.95 சதவீதம்
- 5 ஆண்டுகள் ஒரு நாள் முதல் 10 ஆண்டுகள் வரை - பொதுவான வட்டி விகிதம் - 5.75 சதவீதம்,  மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம்


மேலும் படிக்க | 31 மார்ச் 2022-க்குள் இந்த பணிகளை செய்து முடிக்கவும்: இல்லையென்றால் பெரும் பிரச்சனை 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR