பயணிகளுக்கு ஷாக் கொடுத்த இந்தியன் ரயில்வே: கட்டண சலுகை பற்றிய பெரிய அப்டேட்

Indian Railways: ஹோலி பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே பயணிகளுக்கு ஏதாவது பெரிய அறிவிப்பு வரும் என எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம் வந்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 18, 2022, 11:38 AM IST
  • ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி.
  • மூத்த குடிமக்களுக்கு கட்டண தள்ளுபடி கிடைக்காது.
  • மக்களவையில் ரயில்வே அமைச்சர் பதில் அளித்தார்.
பயணிகளுக்கு ஷாக் கொடுத்த இந்தியன் ரயில்வே: கட்டண சலுகை பற்றிய பெரிய அப்டேட் title=

புதுடில்லி: ரயில்வே அமைச்சகம் சார்பில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளுக்கு ஏதாவது பெரிய அறிவிப்பு வரும் என எண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம் வந்துள்ளது. ரயில்வே துறை பயணிகளுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. 

நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், சலுகைகள் வழங்குவது ரயில்வேக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது, எனவே தற்போது மூத்த குடிமக்கள் உட்பட அனைத்து தரப்பு பயணிகளுக்கும் சலுகைகளை அதிகரிப்பது சரியல்ல என்று தெரிவித்தார். கோவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்ட ரயில்வேயின் பல விதிகளில் இன்னும் சலுகை பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த குடிமக்களுக்கு கட்டணத்தில் சலுகை வழங்குவது இந்த விதிகளில் ஒன்றாகும். இது மார்ச் 2020ல் கொரோனா தொற்று காரணமாக நீக்கப்பட்டடது.  

வருமானம் குறைவதைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு

கொரோனா தொற்று பரவுவதற்கு முன்பு, மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக, இந்த சலுகை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், ரயில்வே அமைச்சர் இந்த சலுகையை மீண்டும் அளிக்க மறுத்துவிட்டார். 2019-20 வருவாயை விட 2020-21 ஆம் ஆண்டிற்கான ரயில்வேயின் வருவாய் குறைவாக இருப்பதாக அவர் கூறினார். ரயில்வேயின் வருவாய் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | இண்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் முறையில் எல்பிஜி சிலிண்டர்களை புக் செய்வது எப்படி? 

இந்த பயணிகளுக்கு சலுகை வழங்கப்படும்

கொரோனா காலத்தில் ரயில் பயணிகளுக்கான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டபோது, ​​டிக்கெட்டில் தள்ளுபடி நிறுத்தப்பட்டது. எனினும், சில சிறப்பு பிரிவினருக்கு மீண்டும் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படுவது துவக்கப்பட்டது. இதில் 4 வகை மாற்றுத்திறனாளிகள், 11 தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் மாணவ, மாணவியர் அடங்குவர். இவர்களுக்கு கட்டணத்தில் சலுகைகள் தொடங்கப்பட்டன. 

மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு தள்ளுபடி கிடைத்தது?

கொரோனாவுக்கு முன்னர், குறிப்பிடத்தக்க வகையில், இந்திய ரயில்வேயின் அனைத்து ரயில்களிலும், மூத்த குடிமக்களுக்கு டிக்கெட்டுகளில் 50 சதவீதம் வரை சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. ரயில்வேயில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்கள் பிரிவில் வைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக்கு முன்பு, ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட அனைத்து மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் அடிப்படைக் கட்டணத்தில் ஆண்களுக்கு 40 சதவீதமும், பெண்களுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க | Old Pension Scheme: மத்திய அரசு அளித்த விளக்கத்தால் ஊழியர்களுக்கு அதிர்ச்சி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News