வங்கி எஃப்டி வட்டி விகிதம்: வங்கியில் நிலையான வைப்பு அதாவது எஃப்டி போடுவதற்கான எண்ணம் உங்களுக்கு இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகு, பங்குச் சந்தையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நிலையான வைப்புத்தொகை முதலீடு செய்வதற்கான சிறந்த மற்றும் பாதுகாப்பான வழியாக கருதப்படுகின்றது. எஃப்டி-யில் நிலையான வட்டியின் பலனை முதலீட்டாளர்கள் பெறலாம் என கூறப்படுகின்றது. இதனுடன், உங்களுக்கு பண உத்தரவாதமும் கிடைக்கும்.
7 சதவீத வட்டியின் பலன் கிடைக்கும்
ஹோலிக்கு முன்பு, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 3 வருட எஃப்.டி-க்கு 7 சதவீத வட்டியின் பலனை வழங்கும் ஒரு வங்கியைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதிய கட்டணங்கள் மார்ச் 10 முதல் அமலுக்கு வந்துள்ளன
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியும் நிலையான வைப்புகளின் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. தற்போது, இந்த வங்கி 3 ஆண்டுகளுக்கான எஃப்டி-க்கு வாடிக்கையாளர்களுக்கு 7 சதவீத வட்டியின் பலனை வழங்குகிறது.
மேலும் படிக்க | வங்கியில் நமது தகவல்கள் திருடப்பட்டதா? அதிர்ச்சி தகவல்!
வங்கியின் புதிய விகிதங்கள் மார்ச் 10 முதல் அமலுக்கு வந்துள்ளன. இது தவிர, மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீத வட்டிக்கான கூடுதல் பலன் கிடைக்கிறது. அதாவது, மூத்த குடிமக்கள் 7.50 சதவீத வட்டியின் பலனைப் பெறுகிறார்கள்.
எவ்வளவு வட்டி கிடைக்கும்?
சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டி-இன் பலன்களை வழங்குகிறது. வங்கி தற்போது வாடிக்கையாளர்களுக்கு 3.25 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டி-யை வழங்குகிறது.
வட்டி விகிதங்களின் முழு விவரம் பின்வருமாறு:
7 முதல் 45 நாட்கள் - 3.25 சதவீதம்
46 முதல் 90 நாட்கள் - 4.25 சதவீதம்
91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை - 4.75 சதவீதம்
6 மாதங்கள் முதல் 9 மாதங்கள் வரை - 5.25 சதவீதம்
9 மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான எஃப்டி - 5.75 சதவீதம்
1 வருடம் முதல் 1.5 ஆண்டுகள் வரை - 6.50 சதவீதம்
1 வருடம் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை - 6.50 சதவீதம்
2 வருடங்கள் முதல் 3 வருடங்களுக்கும் குறைவான எஃப்-டி-களில் - 6.25 சதவீதம்
3 ஆண்டு எஃப்டி - 7%
3 முதல் 5 ஆண்டுகள் எஃப்டி - 6.50 சதவீதம்
5 ஆண்டுகள் - 6.75 சதவீதம்
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை - 6 சதவீதம்
மேலும் படிக்க | ஏடிஎம் கார்டுகளில் ஏன் 4 இலக்க பின் நம்பர் பயன்படுத்தப்படுகிறது?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR