விவசாயிகளுக்கு நற்செய்தி; உங்க அக்கவுண்டுக்கு விரைவில் பணம் வரும்
PM Kisan Samman Nidhi : நீங்கள் e-KYC செய்து கொள்ளவில்லை என்றால், PM கிசான் சம்மன் நிதியின் 11வது தவணைக்கான உங்கள் பணம் சிக்கியிருக்கலாம்.
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், மத்திய அரசிடமிருந்து விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு 6000 ரூபாய் அனுப்பப்படுகிறது. இந்தத் தொகை தலா 2000 ரூபாய் என மூன்று தவணைகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஐந்து மாநில தேர்தலுக்கு முன் 10வது தவணையை மத்திய அரசு வழங்கியது. இதற்கிடையில் 11வது தவணைக்கு இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 11ஆவது தவணைத் தொகையாக ரூ.2,000 விரைவில் கிடைக்க இருக்கிறது. இந்த தவணையின் வெளியீட்டு நேரம் ஏப்ரல் முதல் ஜூலை வரை ஆகும். ஆனால் ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பினால், தகுதியான விவசாயிகளின் காத்திருப்பு முடிவுக்கு வரப்போகிறது.
மேலும் படிக்க | SBI அற்புதமான சலுகை, ஷாப்பிங் செய்து 70% தள்ளுபடி பெறுங்கள்
ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது
விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது. இந்தப் பணம் ஒவ்வொரு ஆண்டும் தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 10 தவணைகள் விவசாயிகளின் கணக்கில் வந்துள்ளன.
11வது தவணையைப் பெற இ-கேஒய்சி அவசியமா
பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு இ-கேஒய்சி கட்டாயம் என்றும், அருகாமையில் உள்ள சிஎஸ்சி சேவை மையங்களை தொடர்பு கொண்டு பயோமெட்ரிக் பதிவை செய்து கொள்ளுமாறு பிரதமரின் வேளாண் நிதியுதவி திட்ட இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இ-கேஒய்சி செய்யவில்லை என்றால், உங்கள் பணம் சிக்கிக்கொள்ளலாம். விவசாயிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, pmkisan.gov.in இல் கேஒய்சி செயல்முறையை அரசாங்கம் மீண்டும் தொடங்கியுள்ளது. இப்போது நீங்கள் வீட்டில் இருந்தபடியே இ-கேஒய்சி செய்யலாம்.
இ-கேஒய்சி எவ்வாறு செய்வது
* முதலில், விவசாயிகள் பிஎம்-கிசான் இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
* பின்னர் முகப்புப் பக்கத்தில் உள்ள ‘இ-கேஒய்சி’ விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்
* ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் பயனாளி விவசாயியின் ஆதார் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலை கிளிக் செய்ய வேண்டும்.
* பின்னர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படும் இடத்தில், பொபைல் எண்ணை உள்ளிட்டவும். அதை உள்ளிட்ட பிறகு ‘ஓடிபி பெறவும்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
* இப்போது, ஓடிபி ஐ உள்ளிட வேண்டும். இப்போது பிஎம்-கிசான் இ-கேஒய்சி சமர்ப்பிக்கப்பட்டு விடும்.
* இந்த செயல்முறை தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
மேலும் படிக்க | PF தொகையை மாற்றணுமா: வீட்டில் இருந்தபடியே செய்யலாம், எளிய செயல்முறை இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR