PM kisan Man Dan Yojna: பிரதமர் கிசான் சம்மான் நிதியின் பயனாளிகளுக்கு ஒரு நல்ல செய்தி. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் மாதந்தோறும் 3000 ரூபாய் பெறலாம். இதற்கு எந்த ஆவணமும் கொடுக்க வேண்டியதில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், இதுவரை விவசாயிகள் மூன்று தவணைகளாக ரூ.2000 அதாவது ஆண்டுக்கு 6000 ரூபாய் பெறுகிறார்கள். ஆனால் இப்போது இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.36000 பெறலாம். அதன் முழு செயல்முறையையும் இங்கே தெரிந்து கொள்வோம்.


இப்போது விவசாயிகள் ரூ 36000 பெற முடியும்


பிரதம மந்திரி சிசான் மன்தன் திட்டத்தின் கீழ், (PM Kisan Mandhan Yojana) விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 60 வயதிற்குப் பிறகு, விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 3000 ரூபாய் ஓய்வூதியம், அதாவது ஆண்டுக்கு 36000 ரூபாய் வழங்கப்படுகிறது. 


மோடி அரசு இந்தத் தொகையை விவசாயிகளின் நிதி உதவிக்காக வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்து உத்தரவாதமான ஓய்வூதியத்தை எவ்வாறு பெறுவது என்பதை இந்த பதிவில் காணலாம். 


தேவையான ஆவணங்கள்


மத்திய அரசால் நடத்தப்படும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, உங்களுக்கு சில ஆவணங்கள் தேவைப்படும். ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரங்கள் போன்றவை இதில் முக்கியமானவை. எனினும், நீங்கள் பிரதம மந்திரியின் விவசாயிகள் நலத்திட்டத்தைப் (PM Kisan) பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், இதற்காக நீங்கள் எந்தக் கூடுதல் ஆவணத்தையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. 


ALSO READ | இந்த விவசாயிகளுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும்! உங்கள் பெயர் உள்ளதா? 


18 வயது முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் வயதுக்கு ஏற்ப முதலீட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்த திட்டத்தின் பலன் யாருக்கு கிடைக்கும்?


1. 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.


2. இதற்கு, சாகுபடி நிலம் அதிகபட்சம் 2 ஹெக்டேர் வரை இருக்க வேண்டும்.


3. இதில், குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ள விவசாயிகள், விவசாயிகளின் வயதைப் பொறுத்து மாதம் ரூ.55 முதல் ரூ.200 வரை முதலீடு செய்ய வேண்டும்.


4. 18 வயதில் இந்த திட்டத்தில் சேரும் விவசாயிகள் (Farmers) மாத பங்காக ரூ.55 செலுத்த வேண்டும்.


5. விவசாயியின் வயது 30 ஆக இருந்தால், அவர் ரூ.110 டெபாசிட் செய்ய வேண்டும்.


6. நீங்கள் 40 வயதில் சேர்ந்தால், ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.


ALSO READ | PM Kisan: விவசாயிகளுக்கு நல்ல செய்தி, இந்த திட்டத்தில் உறுதியான ஓய்வூதியம் நிச்சயம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR