நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியி அளித்துள்ளது. அதன்படி ஐசிஐசிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களை குழி படுத்தும் வகையில் தற்போது ஃபிக்ஸ்ட் டெபாசிட் விகிதங்களின் வட்டி விகிதங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மேலும் மொத்த FDகளில் இந்த அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐசிஐசிஐ வங்கி ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மிகப்பெரிய ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கிறது. ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதங்களை உயர்த்தியது தொடர்பாக ஐசிஐசிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய விகிதங்களை பற்றி தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த புதிய விகிதங்கள் ஜனவரி 7ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திருத்தின்படி வாடிக்கையாளர்கள் 7 நாட்கள் முதல் 10 வருடங்களில் முதிர்ச்சியடையும் எஃப்டிகளுக்கு 4.50% முதல் 6.75% வரையிலான வட்டியைப் பெறுவார்கள். அதே நேரத்தில், அதிகபட்ச வட்டி விகிதம் 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான FDகளுக்கு 7.15 சதவீத வட்டியைப் பெறுவார்கள்.


மேலும் படிக்க | உங்ககிட்ட இந்த 50 ரூபாய் நோட்டு இருக்கா? அப்போ உங்களுக்கு ஜாக்பாட்


ஐசிஐசிஐ வங்கி மொத்த எஃப்டிக்கான விகிதங்கள்
– 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை – 4.50%
– 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை – 5.25%
– 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை – 5.50%
– 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை – 5.75%
– 91 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை – 6.25%
– 185 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை – 6.50%
– 271 நாட்கள் முதல் 1 வருடம் வரை – 6.65 சதவீதம்
– 1 வருடம் முதல் 15 மாதங்கள் வரை – 7.10 சதவீதம்
– 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை – 7.15%
– 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை – 7%
– 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை – 6.75%


கோடக் மஹிந்திரா வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தியது
கோடக் மஹிந்திரா வங்கியும் சமீபத்தில் தனது FD விகிதங்களை அதிகரிக்க முடிவு செய்தது. அதன்படி 2 கோடிக்கும் குறைவான FDகளில் இந்த அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் ஜனவரி 4, 2023 முதல் அமலுக்கு வந்தன. எனவே இப்போது நாம் கோடக் மஹிந்திரா வங்கியின் மொத்த எஃப்டிக்கான விகிதங்கள்


7 முதல் 14 நாள் FD - 3.25%
15 முதல் 30 நாட்களுக்கு FD – 3.50%
30 முதல் 45 நாட்கள் FD - 5.25%
46 முதல் 60 நாட்களுக்கு FD – 5.50%
61 முதல் 90 நாட்கள் FD - 5.75%
91 முதல் 184 நாட்களுக்கு FD - 6.25%
185 முதல் 270 நாட்களுக்கு FD – 6.50%
271 நாட்களில் இருந்து 1 வருடம் வரை FD - 6.65%
1 வருடம் முதல் 15 மாதங்கள் வரை FD - 7.10%
15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை FD - 7.15%
2 முதல் 3 ஆண்டுகளுக்கு FD - 7.00%
3 முதல் 10 ஆண்டுகள் வரை FD - 6.75%


மேலும் படிக்க | Tax Saving Plans : 2023இல் வருமான வரியை குறைக்கணுமா... இதை பண்ணுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ