இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி! 12 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்
Travel Tips | இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி என்னவென்றால் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு விசா இல்லாமலேயே இந்த 12 நாடுகளுக்கு செல்லலாம்.
Travel Tips, Indian passport | புத்தணாட்டு மிக மிக நெருக்கமாக உள்ளது. இந்த புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட பலரும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விமான டிக்கெட் எல்லாம் புக் செய்துவிட்டார்கள். இருப்பினும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு குட்நியூஸ் இருக்கிறது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் 12 நாடுகளுக்கு விசா இல்லாமலேயே செல்ல முடியும். அவை எந்தெந்த நாடுகள் என தெரிந்து கொள்ளுங்கள்.
1. தாய்லாந்து: இந்தியாவில் இருந்து மிக குறுகிய விமான பயணத்தில் செல்லக்கூடிய நாடு தாய்லாந்து. அங்கு பிரம்மிக்க வைக்கும் கடற்கரைகள், கலகலப்பான இரவு பார்டிகள் மற்றும் ஏராளமான உணவு வகைகள் எல்லாம் இருக்கும். இது ஒரு கனவு பயணமாகவும் உங்களுக்கு இருக்கும். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 60 நாட்கள் வரை விசா இல்லாமல் தாய்லாந்து நாட்டில் சுற்றுலாவை அனுபவிக்க முடியும்.
2. பூட்டான்: பூட்டான் என்றால் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த நிலம். ஆன்மீகமும் இயற்கையும் இரண்டற கலந்திருக்கும் ஒரு அற்புத நாடு. தியானம் இருக்க ஏராளமான மடங்கள் இருக்கும். மெய்சிலிர்க்க வைக்கும் மலை முகடுகள் எல்லாம் காணலாம். இந்திய குடிமக்கள் 14 நாட்கள் வரை விசா இல்லாமல் இந்த நாட்டில் இருக்கலாம்.
3. நேபாளம்: நமது ஆன்மீக அண்டை நாடான நேபாளம், இந்தியர்களுக்கு விசா இல்லாமல் செல்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. கம்பீரமான இமயமலையின் அழகை ரசிப்பது முதல் காத்மாண்டுவின் துடிப்பான தெருக்கள் வரை, ஏராளமான இடங்கள் சுற்றிப் பார்க்க இருக்கின்றன.
4. மொரிஷியஸ்: மொரீஷியஸ் ஒரு அழகிய தீவு. சொர்க்க பூமியும் கூட. இங்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் 90 நாட்கள் விசா இல்லாமல் தங்கி மகிழலாம். பவளப்பாறைகளின் அழகை ரசிக்கலாம்.
மேலும் படிக்க | ரயில்வேயின் விகல்ப் திட்டம்... வெயிட்டிங் லிஸ்ட் பயணிகள் கன்பர்ம் டிக்கெட் பெறலாம்
5. மலேசியா: இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் மலேசியாவில் இருக்க முடியும். அழகிய கடற்கரைகளை ஆராயலாம், பல வகையான கலாச்சாரம் என சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன.
6. ஈரான்: ஈரானின் வரலாறு மற்றும் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை உங்களை வரலாற்று பக்கங்களுக்கு அழைத்துச் செல்லும். இந்தியர்கள் விசா இல்லாமல் 15 நாட்கள் வரை தங்கலாம்.
7. அங்கோலா: தனித்துவமான கலாச்சாரத்தை கொண்டிருக்கும் இந்த நாட்டில் இந்திய குடிமக்கள் 30 நாட்கள் வரை தங்கலாம். ஆண்டுக்கு 90 நாட்கள் வரை விசா இல்லாமல் அங்கு இருக்கலாம். ஆப்பிரிக்காவின் அழகை உங்களால் ரசிக்க முடியும்.
8. டொமினிகா: பசுமையான மழைக்காடுகள் மற்றும் அழகிய கடற்கரைகள் கொண்டிருக்கும் "நேச்சர் தீவு". இந்திய பயணிகள் விசா இல்லாமல் 180 நாட்கள் தங்கலாம்,
9. சீஷெல்ஸ்: சொர்க்கம் என்றால் இந்த நாடு தான். சீஷெல்ஸ் கடற்கரை ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு கனவு. 30 நாட்கள் வரை விசா இல்லாமல் இருக்கலாம்.
10. ஹாங்காங்: நகர வாழ்க்கை மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றின் இரண்டற கலவையாகும். அந்நாட்டில் 14 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்குவதற்கு ஆன்லைன் முன் பதிவு (PAR) வழங்குகிறது. நீங்கள் ஷாப்பிங் செய்ய விரும்பினாலும் சரி, ஹைகிங் செல்ல விரும்பிலானும், எல்லாமே ஹாங்காங்கில் உள்ளது.
11. கஜகஸ்தான்: பரந்த புல்வெளிகள், நவீன நகரங்கள் மற்றும் வளமான கலாச்சாரம் கொண்ட நாடு கஜகஸ்தான். இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், 14 நாட்கள் வரை விசா இல்லாமல் அங்குள்ள சுற்றுலா தளங்களை பார்வையிடலாம்.
12. பிஜி: பசுமையான தீவு. சொர்க்கம் என சுற்றுலா பயணிகளால் சொல்லப்படும் இந்த நாட்டில் விசா இல்லாமல் இந்தியர்கள் பயணிக்க முடியும் என்பதால் இந்த புத்தாண்டை இந்த நாட்டில் கொண்டாட இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: உங்கள் பயணத் திட்டங்களை இறுதி செய்வதற்கு முன், லேட்டஸ்ட் விசாக் கொள்கைகளைச் சரிபார்த்துக் கொள்ளவும்.)
மேலும் படிக்க | ரயில் டிக்கெட்டை வேறொருவருக்கு மாற்றலாம்... தேதியையும் மாற்றலாம்... இதோ வழிமுறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ