ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் செய்தி: அதிகரிக்கிறதா ஓய்வூதியம்? விரைவில் அரசு அறிவிப்பு
மோடி அரசாங்கம் PF கணக்கு வைத்திருப்பவர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை உயர்த்துவதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடக்கூடும்.
புதுடெல்லி: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சந்தாதாரர்களுக்கு மத்திய அரசு (Modi Government) இப்போது மிகப்பெரிய நற்செய்தியை வழங்க உள்ளது. மோடி அரசாங்கம் PF கணக்கு வைத்திருப்பவர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை உயர்த்துவதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடக்கூடும். இது குறித்து EPFO இன் மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.
இதில் பல பெரிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். அதன் பின்னரே ஓய்வூதியத்தை (Pension) அதிகரிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். இந்தக் கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரல் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது குறித்து முடிவெடுப்பதாகும்.
தொழிற்சங்கங்களின் கோரிக்கை என்ன?
ஊடகங்களில் வெளியான செய்தியில், 'மத்திய தொழிற்சங்கங்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ.1,000-ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளன. ரூ. 3,000 வரை மத்திய அறங்காவலர் குழு இதை உயர்த்தக்கூடும்’ என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில், EPFO பணத்தை தனியார் கார்ப்பரேட் பத்திரங்களில் (Private Corporate Bonds) முதலீடு செய்வது குறித்த சர்ச்சைக்குரிய விஷயமும் விவாதிக்கப்படும். இதனுடன், 2021-22 நிதியாண்டிற்கான ஓய்வூதிய நிதியின் வட்டி விகிதம் குறித்தும் முடிவு எடுக்கப்படலாம்.
ALSO READ:EPF-ல் பெரிய மாற்றம்: இனி ஊழியர்களிடம் இருக்கும் 2 PF கணக்குகள், விவரம் இதோ
இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது
குறிப்பிடத்தக்க வகையில், மத்திய அறங்காவலர் குழுவும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க முடிவு செய்யக்கூடும். இதனுடன், EPF இல் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் தற்போதைய வட்டி விகிதமான (Interest Rate) 8.5 சதவிகிதம் (EPF மீதான வட்டி) தொடரக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை.
முன்னதாக இந்த கூட்டம் நவம்பர் 16-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது, எனினும், பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டது. இது தவிர, இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களுக்கான பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கூட்டத்தில் வட்டியை அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டது
மார்ச் 2021 இல் ஸ்ரீநகரில் நடைபெற்ற CBT இன் முந்தையக் கூட்டத்தில், 2020-21 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர்களின் கணக்குகளில் EPF வைப்புத்தொகைக்கு 8.5 சதவீத விகிதத்தில் வருடாந்திர வட்டி வழங்க பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு நிதி அமைச்சகமும் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
ALSO READ:உங்க பிஎஃப் பேலன்ஸை ஈசியாக எவ்வாறு செக் செய்வது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR