மோடி அரசு செவ்வாயன்று வருங்கால வைப்பு நிதியில் (Provident Fund) வைப்பு வரம்பை ஆண்டுக்கு ரூ .5 லட்சமாக உயர்த்தியது. இதன் வட்டிக்கு தொடர்ந்து வரி விலக்கு அளிக்கப்படும். ஓய்வூதிய நிதியில் முதலாளிகளால் எந்த பங்களிப்பும் செய்யப்படாத பணியாளர்களுக்கு இது பொருந்தும்.
பிப்ரவரி 1 ம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனது பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூ .2.5 லட்சத்திற்கு மேலுள்ள வருங்கால வைப்பு நிதி பங்களிப்புக்கான வட்டிக்கு 2021 ஏப்ரல் 1 முதல் வரி விதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
மக்களவையில் நிதி மசோதா 2021 தொடர்பான விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர், வருங்கால வைப்பு நிதியில் முதலாளிகள் பங்களிப்பு செய்யாத சந்தர்ப்பங்களில் வரம்பை ரூ .5 லட்சமாக உயர்த்துவது குறித்து அறிவித்தார்.
2021-22 ஆம் ஆண்டிற்கான வரி (Tax) முன்மொழிவுகளை அமல்படுத்தும் நிதி மசோதா, குரல் வாக்கு மூலம் அங்கீகரிக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட சட்டத்தில் 127 திருத்தங்களை ஏற்றுக்கொண்ட பின்னர் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
ALSO READ: LPG கேஸ் சிலிண்டர்களில் ரூ .700 கேஷ்பேக் வேண்டுமா? இதை உடனே செய்யுங்கள்!
வருங்கால வைப்பு நிதி பங்களிப்புக்கான வட்டி மீதான வரி பங்களிப்பாளர்களில் 1 சதவீதத்தை மட்டுமே பாதிக்கிறது என்றும், மீதமுள்ளவர்கள் தங்கள் பங்களிப்பு ஆண்டுக்கு ரூ .2.5 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதால் பாதிக்கப்படுவதில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மோட்டார் எரிபொருள் மீதான அதிக வரி குறித்து பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பியுள்ள பிரச்சினைகள் குறித்து குறிப்பிட்டுள்ள நிதி அமைச்சர், அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி (GST) வரி வகையின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றைக் கொண்டு வருவது குறித்து விவாதிக்க விரும்புகிறேன் என்றார். மோட்டார் எரிபொருளுக்கு, மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் வரி விதிக்கின்றன என்பதை அவர் உறுப்பினர்களுக்கு நினைவூட்ட முயன்றார்.
உள்நாட்டு வணிகங்களுக்கு, குறிப்பாக எம்.எஸ்.எம்.இ (MSME) பிரிவுக்கு உதவ சுங்க வரி கட்டமைப்பை சீர்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் நிதியமைச்சர் கூறினார். வரிகளில், வரி தளத்தை விரிவுபடுத்துவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சமன்பாடு வரி குறித்து, இது இந்தியாவில் வரி செலுத்தும் உள்நாட்டு வணிகங்களுக்கு ஒரு நிலையான சமமான தளத்தை வழங்குவதற்கான வழியாகும் என்று அவர் தெரிவித்தார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR