உங்க பிஎஃப் பேலன்ஸை ஈசியாக எவ்வாறு செக் செய்வது

உங்களது வைப்பு நிதி கணக்கில், எவ்வளவு தொகை உள்ளது என்பதை இங்கே பார்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 17, 2021, 05:46 PM IST
உங்க பிஎஃப் பேலன்ஸை ஈசியாக எவ்வாறு செக் செய்வது title=

How to check PF Account Balance: அரசால் உருவாக்கப்பட்ட தொழிலாளர் வைப்பு நிதி திட்டம் வருங்கால வைப்பு நிதி சட்டம் 1956-ன் கீழ் ஏற்படுத்தப்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, வைப்பு நிதி திட்டத்தை முறைப்படுத்தி வருகிறது.

வைப்பு நிதி நிலவரங்களை அறிந்துக் கொள்ள, தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தின் (PF Account) கீழ் பதவு செய்யப்பட்ட தனிநபர் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் தனித்துவமான வைப்பு நிதி எண்ணை தெரிந்திருக்க வேண்டும். UAN எனப்படும் இந்த எண்ணை, திட்டத்தில் சேரும் ஒவ்வொரு பயனாளருக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால ஒதுக்கப்படுகிறது. 

ALSO READ | உங்களிடம் PF கணக்கு உள்ளதா?.. மத்திய அரசு உங்களுக்கு சிறப்பு பரிசை வழங்கும்..!

உங்களது வைப்பு நிதி கணக்கில், எவ்வளவு தொகை உள்ளது என்பதை இங்கே பார்போம்:

மிஸ்ட் கால் மூலம் எவ்வாறு பார்ப்பது
வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணிலிருந்து, 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுக்கவும். பின்னர் உதவி மையத்திலிருந்து உங்களுக்கு உதவ போன் செய்வாரகள். அவர்களிடம், உங்களது வைப்பு நிதி நிலுவைத் தொகை குறித்து விசாரிக்கலாம்.

SMS மூலம் எவ்வாறு பார்ப்பது
உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண்ணிலிருந்து, 7738299899 என்ற எண்ணுக்கு, EPFOHO UAN என டைப் செய்து எம்.எம்.எஸ் அனுப்புவதன் மூலம், வைப்பு நிதி நிலுவை குறித்தான தகவல்களை பெறலாம்.

Umang ​செயலி மூலம் எவ்வாறு பார்ப்பது
* Umang app செயலியை தரவிறக்கம் செய்யவும்.
* இதில் EPFO ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
* பின், தொழிலாளர் சேவைகான பிரிவை க்ளிக் செய்யவும்.
* தொழிலாளர் வைப்பு நிதி இருப்பை தெரிந்துக் கொள்ள, ‘View Passbook’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
* பின்னர் UAN எண்ணை பதவிட்டு, UAN இல் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP ஐ அனுப்ப Get OTP ஐக் கிளிக் செய்து அந்த எண்ணை உள்ளிடவும். 
* EPFO இருப்பை சரிபார்க்க விரும்பும் நிறுவனத்தின் உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுக்கவும்.
* இறுதியாக, உங்கள் பாஸ்புக் உங்கள் EPFO நிலுவைத் தொகையுடன் திரையில் தோன்றும்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News