மூத்த குடிமக்களுக்கான மத்திய அரசின் திட்டம்: மக்கள் நலனுக்கான பல திட்டங்களை மத்திய மோடி அரசாங்கம் நடத்தி வருகிறது. மூத்த குடிமக்களுக்கு அரசு பல வசதிகளை செய்து கொடுத்துள்ளது. தற்போது மோடி அரசு மூத்த குடிமக்களுக்கு ரூ.70,500 வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆம்!!  நீங்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்திருந்தார்


பட்ஜெட்டில் பல சிறப்பு அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இப்போது மூத்த குடிமக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து ஒவ்வொரு மாதமும் 70,500 ரூபாய்க்கான முழு பலன் கிடைக்கும். அரசாங்கம் பல வித நலத்திட்டங்களை பொது மக்களுக்காக நடத்தி வருகிறது. இவற்றில் முதலீடு செய்து நீங்களும் கோடீஸ்வரராகலாம். இந்தத் திட்டங்கள் மூலம் கிடைக்கும் பலன்களை ஒன்று சேர்த்தால், அதன் படி ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். இந்த வருமானத்தை ஈட்டுவது எப்படி என இந்த பதிவில் காணலாம். 


அரசின் திட்டங்கள் பல உள்ளன


தற்போது, ​​மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS), பெண்களுக்கான மகிலா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) மற்றும் பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) போன்ற பல அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் நல்ல லாபம் ஈட்ட முடியும். 


மேலும் படிக்க | மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்... 7ஆவது ஊதியக்குழுவின் கீழ் சம்பள உயர்வு - அறிவிப்பை வெளியிட்ட அரசு! 


மாதம் 70,500 ரூபாய் கிடைக்கும்


இந்தத் திட்டங்கள் அனைத்திலும் நீங்கள் ரூ. 1.1 கோடி முதலீடு செய்தால், மூத்த குடிமக்களாக இருக்கும் ஒரு தம்பதிக்கு மாத வருமானம் சுமார் ரூ. 70,500 கிடைக்கும். மேலும் இது உறுதியான வருமானம் ஆகும்.


30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்


நீங்கள் SCSS இல் 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதாவது நீங்கள் ஒரு கூட்டுக் கணக்கில் 60 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். மற்றும் இதில் உங்களுக்கு 8% விகிதத்தில் வட்டியின் பலன் கிடைக்கும். POMIS- ன் கீழ், நீங்கள் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கு 7.1 சதவீதம் வட்டி கிடைக்கும்.


அதிக வட்டி கிடைக்கும்


MSSC திட்டத்தில் நீங்கள் அதிகபட்சம் 2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இருப்பினும் இந்தத் திட்டம் பெண்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு 7.5 சதவீதம் வட்டி கிடைக்கிறது. PMVVY திட்டத்தின் கூட்டுக் கணக்கில் நீங்கள் 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம், இதில் உங்களுக்கு 7.4 சதவீத வட்டி கிடைக்கும்.


மேலும் படிக்க | உங்கள் ஆதார் அட்டை 10 ஆண்டுகள் பழமையானதா.. இன்றே புதுபிக்கவும்... இல்லையெனில்...! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ