Good News Ration Card holders: ரேஷன் கார்டு மிக முக்கியமான அரசு ஆவணம். இதன் மூலம், உணவு தானியங்களை மானிய விலையில் ரேஷன் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம். இந்த ரேசன் அட்டை மாநில அரசுகளால் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு டெல்லி அரசு ஒரு வசதியை அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரேஷன் கார்டு (Ration Card) வைத்திருப்பவர்கள் மருத்துவக் காரணங்களாலோ அல்லது வயது முதிர்ந்த காரணத்தாலோ ரேஷன் கடைக்குச் செல்ல முடியாத சூழலில், இனி அவர்களுக்கு பதிலாக மற்றொரு நபரை அனுப்பலாம். தற்போதுள்ள விதிகளின்படி, ரேஷன் கடையில் பயோமெட்ரிக் கைரேகைக்குப் பிறகுதான் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.


ஏனென்றால் டெல்லியில் உள்ள ரேஷன் கடைகளில் இ-பிஓஎஸ் (Electronic point of sale) அமைப்பு முறை செயல்பாட்டில் உள்ளது. இதன் கீழ் ஒரு பயனாளி கட்டைவிரல் அல்லது கருவிழி அங்கீகாரத்திற்குப் பிறகு உணவு தானியங்களை வாங்கிச் செல்ல முடியும். ஆனால் இந்த புதிய விதியின் கீழ், மருத்துவ காரணங்களுக்காக அல்லது வயது அதிகரிப்பால் ரேஷன் கடைக்கு செல்ல முடியாதவர்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டு உள்ளது. 


ALSO READ | அரசு அளிக்கும் நன்மையை பெற ரேஷன் கார்டில் மாற்றம் தேவையா?


ஆகஸ்ட் 26 ஆம் தேதி அன்று, இதுதொடர்பான அரசாணையை உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை (Food and Civil Supplies Department) வெளியிட்டது. அதில், "வயது முதிர்வு அல்லது இயலாமை காரணமாக ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாதவர்கள் மாதாந்திர மானிய உணவு தானியங்களை வாங்கி வர மற்றவர்களை பரிந்துரைக்கலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.


65 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 16 வயதிற்குட்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம் பயோமெட்ரிக் கைரேகைக்கு ரேசன் கடைக்குச் (Ration Shop) செல்ல முடியாது. குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், ஊனமுற்றோர், நோய் காரணமாக படுக்கையில் இருந்தால் அல்லது பிற நோய்கள் மற்றும் சில குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தால். அவர்களால் கடைக்கு செல்ல முடியாது. இவர்கள் அனைவரும் வேறு ஒருவரை கடைக்கு அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ALSO READ | ரேஷன் கார்டு அப்டேட்: செப்டம்பர் 30க்குள் இதை செய்யாவிட்டால் சிக்கல் ஏற்படும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR