SBI offer: ரூ. 2 லட்சம் இலவச காப்பீடு; யாருக்கெல்லாம் கிடைக்கும்..!!
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) என்பது நாட்டின் வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பூஜ்ஜிய நிலுவையில் தொடங்கப்படும் எழைகளுக்கன ஒரு வங்கி கணக்கு திட்டமாகும்.
SBI Insurance Cover: நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ரூபே டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும், ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் ரூ.2 லட்சம் வரையிலான விபத்து காப்பீட்டை இலவச வழங்குகிறது.
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) என்பது நாட்டின் வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பூஜ்ஜிய நிலுவையில் தொடங்கப்படும் எழைகளுக்கன ஒரு வங்கி கணக்கு திட்டமாகும். பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) கீழ், வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் கணக்கு தொடங்க, எந்தவொரு நபரும் KYC ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் ஆன்லைனில் அல்லது SBI வங்கிக்கு சென்று ஜன் தன் கணக்கைத் தொடங்கலாம். இதுமட்டுமின்றி, எவரும் தங்கள் சேமிப்பு வங்கிக் கணக்கை, ஜன் தன்கணக்காக மாற்றலாம். இதில், RuPay கார்டு வழங்கப்படுகிறது. இந்த டெபிட் கார்டில், விபத்துக்கான காப்பீட்டை இலவசமாக பெறலாம்.
காப்பீட்டு தொகையை முதலில் உரிமைகோரல் படிவத்தை நிரப்ப வேண்டும். இதனுடன், அசல் இறப்பு சான்றிதழ் அல்லது சான்றளிக்கப்பட்ட நகல் இணைக்கப்பட வேண்டும். FIR-ன் அசல் அல்லது சான்றளிக்கப்பட்ட நகலை இணைக்கவும். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் FSL அறிக்கையும் இருக்க வேண்டும். வங்கி ஸ்டாம்ப் பேப்பரில் அட்டைதாரர் ரூபே கார்டு வைத்திருப்பதாக வாக்குமூலம் கொடுக்கப்பட வேண்டும். அனைத்து ஆவணங்களும் 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நாமினியின் பெயர் மற்றும் வங்கி விவரங்களை பாஸ்புக் நகலுடன் சமர்ப்பிக்க வேண்டும். விபத்து நடப்பதற்கு 90 நாட்களுக்கு முன்னர் ரூபே டெபிட் கார்டைப் பயன்படுத்தி கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தது ஒரு பயனுள்ள பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும்.
ALSO READ: Cheap and Best Home Loan: மிகக்குறைந்த வட்டி விகிதத்தில் கடன் தரும் வங்கி எது?
தேவையான ஆவணங்கள்
1. காப்பீட்டு உரிமைகோரல் படிவம்.
2. இறப்பு சான்றிதழின் நகல்.
3. அட்டைதாரர் மற்றும் நாமினியின் ஆதார் நகல்.
4. பிற காரணங்களால் மரணம் ஏற்பட்டால் இரசாயன பகுப்பாய்வு அல்லது எஃப்எஸ்எல் அறிக்கையுடன் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகல்.
5. விபத்து பற்றிய விவரங்கள் உள்ள FIR அல்லது போலீஸ் அறிக்கையின் அசல் அல்லது சான்றளிக்கப்பட்ட நகல்.
6. அங்கீகரிக்கப்பட்ட கையொப்பம் மற்றும் டெபிட் அட்டை வழங்கும் வங்கி முத்திரையுடன் முறையாக கையொப்பமிடப்பட்ட வங்கி சார்பாக கொடுக்கப்படும் பிரகடனம்.
7. இதில் வங்கி அதிகாரியின் பெயர் மற்றும் மின்னஞ்சல் ஐடியுடன் தொடர்பு விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
ALSO READ: SBI Cards சூப்பர் செய்தி: பண்டிகை கால cashback offer!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR