Fixed Deposit-க்கு மிக அதிக வட்டி அளிக்கும் டாப் வங்கிகள் இவைதான்
எந்த வங்கி அதிக வட்டி அளிக்கின்றதோ, அந்த வங்கியில் எஃப்.டி போட வேண்டும் என மக்கள் நினைப்பது இயல்பான விஷயம்.
பணத்தை சரியாம இடத்தில் முதலீடு செய்து அதை பன்மடங்கு பெருக்க அனைவருக்கும் ஆசை உள்ளது. பணத்தை பெருக்க பல வழிகள் இருந்தாலும், இவற்றில் அபாயமும் அடங்கியுள்ளது. அப்படிப்பட்ட அபாயங்களை எதிர்கொள்ள தயங்குபவர்களுக்கு வங்கிகளின் நிலையான வைப்பு (Fixed Deposit) ஒரு நல்ல வழியாக இருக்கும்.
எனினும், கடந்த சில மாதங்களாக, FD மீதான வட்டி விகிதம் (Interest Rate) கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் வட்டியும் குறைந்து வருகிறது. இந்த நிலையில், எந்த வங்கி அதிக வட்டி அளிக்கின்றதோ, அந்த வங்கியில் எஃப்.டி போட வேண்டும் என மக்கள் நினைப்பது இயல்பான விஷயம். அதற்கு உதவும் வகையில், 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான FD-க்கு அதிக வட்டி அளிக்கும் சில வங்கிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
எஸ்பிஐயும் FD மீதான வட்டியை அதிகரித்துள்ளது
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு ரூ.2 கோடி மற்றும் அதற்கு மேல் உள்ள உள்நாட்டு மொத்த கால வைப்புகளுக்கான வட்டிக்கானது. ரூ.2 கோடிக்கும் குறைவான சில்லறை கால டெபாசிட்டுகளுக்கான (Retail Term Deposits) வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்த புதிய FD வட்டி விகிதங்கள் 15 டிசம்பர் 2021 முதல் அமலுக்கு வந்துள்ளன. வங்கி FD விகிதத்தை 0.10 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்குப் பிறகும், அதிக வட்டி செலுத்தும் டாப் 5 வங்கிகளின் பட்டியலில் எஸ்பிஐ இடம்பெறவில்லை.
1 ஆண்டுக்கான FD:
IndusInd வங்கி - ஆண்டுக்கு 6%
RBL வங்கி - ஆண்டுக்கு 6%
DCB வங்கி - ஆண்டுக்கு 5.55%
பந்தன் வங்கி - ஆண்டுக்கு 5.50%
IDFC ஃபர்ஸ்ட் வங்கி - ஆண்டுக்கு 5.25%
ALSO READ | SBI வாடிக்கையாளர்களே ஜாக்கிரதை; அதிகரித்தது வட்டி விகிதங்கள்
2 ஆண்டுகளுக்கான FD
IndusInd வங்கி - ஆண்டுக்கு 6%
RBL வங்கி - ஆண்டுக்கு 6%
DCB வங்கி - ஆண்டுக்கு 5.55%
பந்தன் வங்கி - ஆண்டுக்கு 5.50%
ஆக்சிஸ் வங்கி - ஆண்டுக்கு 5.40%
3 ஆண்டுகளுக்கான FD
RBL வங்கி - ஆண்டுக்கு 6.30%
IndusInd வங்கி - ஆண்டுக்கு 6%
DCB வங்கி - ஆண்டுக்கு 5.95%
IDFC ஃபர்ஸ்ட் வங்கி - ஆண்டுக்கு 5.75%
சவுத் இண்டியன் வங்கி - ஆண்டுக்கு 5.50%
5 ஆண்டுகளுக்கான FD
RBL வங்கி - ஆண்டுக்கு 6.30%
IDFC ஃபர்ஸ்ட் வங்கி - ஆண்டுக்கு 6%
IndusInd வங்கி - ஆண்டுக்கு 6%
DCB வங்கி - ஆண்டுக்கு 5.95%
ஆக்சிஸ் வங்கி - ஆண்டுக்கு 5.75%
ALSO READ | நீங்கள் SBI வாடிக்கையாளரா? உங்களுக்கான முக்கியமான செய்தி இது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR