TVS Motors: இருசக்கர வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் முன்னணி உற்பத்தியாளரான டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் செவ்வாய்க்கிழமை பல பயன்பாட்டு வாகனமான (Multi-Utility Vehicle)TVS XL100-க்கான எளிய கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'ஒரு நாளைக்கு ரூ .49, எளிய முறையில் வாங்கும் திட்டம்' ('Easy to Buy at Rs 49 a day') என்ற திட்டம், மலிவு விலையில் தங்கள் வாகனங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நிறுவனத்தின் முயற்சிக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது என்று நிறுவனத்தின் ஒரு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.


வாடிக்கையாளர்கள் இப்போது TVS XL100 i-TOUCHstart வகைகளை ஒரு நாளைக்கு ரூ .49 என்ற விலைக்கு வாங்கலாம்! இந்த திட்டத்தின் மூலம், ரூ .49 x 30 நாட்கள் என்ற மதிப்பீட்டில், வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ .1,470 என்ற மிக சாதாரண ஈ.எம்.ஐ தொகையை செலுத்தினால் போதும். 


ALSO READ: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் எது தெரியுமா; விற்பனை தகவல் வெளியீடு


வாடிக்கையாளர்கள் மாதாந்திர ஈ.எம்.ஐ.களை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் இது தினசரி வசூல் அல்லது ரீபேமெண்ட் ஆகியவற்றை உள்ளடக்காது என செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.


வாடிக்கையாளர்களின் அன்றாட பயணத்திற்காக தனிப்பட்ட போகுவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். மேலும், டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் போன்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் டி.வி.எஸ் (TVS) நிறுவனம் கூட்டு சேர்ந்து வாடிக்கையாளர்களுக்கான பல நிதி சேவைகளை வழங்கி வருகின்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள், ஈ.எம்.ஐ வசதிகளை நான்கு வெவ்வேறு காலங்களிலும் பெறலாம்.


மின்சார வாகனங்களிலும் டி.வி.எஸ் நிறுவனம் பின்தங்கி விடவில்லை. டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டி.வி.எஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஒரு சிறந்த மின்சார ஸ்கூட்டராகும். டெல்லியில் அதன் ஆன் ரோட் விலை ரூ .1,08,012 ஆகும். டி.வி.எஸ் ஐகுப் எலக்ட்ரிக் (TVS iCube Electric) 4.4 கே.வி மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இது 78 கி.மீ என்ற வேகத்தில் செல்லும். முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டதும், இது 75 கி.மீ தூரத்தை கடக்க வல்லது. இந்த ஸ்கூட்டர் 4.2 வினாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 40 கி.மீ வேகத்தை அடைய முடியும்.


ALSO READ: Electric Vehicle: பெட்ரோல் கவலை வேண்டாம், பட்ஜெட்டுக்குள் அசத்தலான ஸ்கூட்டர்கள் இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR