2019-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் யார்?
இந்திய அளவில் 2019-ம் ஆண்டு கூகுளில் அதிகமாக தேடப்பட்டவர்களில் முதல் பத்து பேரின் விவரங்களை கூகுள் வெளியிட்டுள்ளது.
இந்திய அளவில் 2019-ம் ஆண்டு கூகுளில் அதிகமாக தேடப்பட்டவர்களில் முதல் பத்து பேரின் விவரங்களை கூகுள் வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களில் அபிநந்தன் வர்த்தமான் முதலிடத்தைப் பிடிதுள்ளார்.
> கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலின் போது இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் வர்த்தமான் பாக்., ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினார். இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் பகுதிக்குள் அபிநந்தன் சென்ற விமானம் விழுந்தது. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அபிநந்தன் பின்னர், மத்திய அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்டார்.
இரண்டாவது இடத்தைப் பாடகர் லதா மங்கேஸ்கர் பிடித்துள்ளார்.
> இவர் கடந்த நவம்பர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் காரணமாக பலர் இவர் குறித்து தேடினர்.
மூன்றாவது இடத்தைப் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிடித்துள்ளார்.
> கடந்த ஜூன் மாதம் இவர் தனது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதனால் பலர் இவர் குறித்து அதிகம் தேடினர்.
நான்காவது இடத்தைப் ஆனந்த் குமார் பிடித்துள்ளார்.
> ஆனந்த குமாரின் வாழ்க்கையைத் தழுவி, ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிந்த சூப்பர் 30 திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, ஆனந்த குமார் குறித்து அதிகமாக தேடப்பட்டுள்ளது.
ஐந்தாவது இடத்தைப் விக்கி கௌஷல் பிடித்துள்ளார்.
> பாகிஸ்தானில் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த உரி படத்தில் நடித்ததன் மூலம் விக்கி கௌஷல் பிரபலமாகி கூகுளில் அதிகமாக தேடப்பட்டார்.
ஆறாவது இடத்தைப் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பிடித்துள்ளார்.
> உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் இடம்பிடித்திருந்தார். இதனால் இவர் பெயர் அதிகம் தேடப்பட்டது.
ஏழாவது இடத்தைப் பாடகி ரனு மண்டல் பிடித்துள்ளார்.
> கொல்கத்தாவில் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் பாட்டுப்பாடிக்கொண்டிந்த இவர் சமூகவலைத்தளங்களில் அதிகம் வைரலாகி இந்திய அளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து, ரனு மண்டல் குறித்து அதிகமாக தேடப்பட்டுள்ளது.
எட்டாவது இடத்தைப் டாரா சுட்டாரியா பிடித்துள்ளார்.
> ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் என்ற படத்தில் அறிமுகமானதன் மூலம் பிரபலமடைந்தார்.
ஒன்பதாவது இடத்தைப் சித்தார்த் சுக்லா பிடித்துள்ளார்.
> ஹிந்தி பிக்பாஸ் 13-ல் பங்கேற்ற சித்தார்த் சுக்லா நவம்பர் மாதத்திலிருந்து ட்ரெண்டிலிருந்து அதிகளவில் தேடப்பட்டார்.
பத்தாவது இடத்தைப் நடிகர் கோயினா மித்ரா பிடித்துள்ளார்.
> பிக்பாஸ் 13-ல் பங்கேற்றிருந்தார். அவர், ஹைதராபாத் எம்.பி அசாதுதின் ஓவைசிக்கு எதிராகவும் ட்விட் செய்ததன் மூலம் பிரபலமானார்.