கூகுள் மேப்ஸ் ஆனது பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்களால் பயன்படுத்தப்படும் நேவிகேஷன் செயலி ஆகும்.  பல ஆண்டுகளாகவே ஆப்பிள் மேப்ஸ் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு மேம்பாடுகளை செய்து வருகிறது, இருப்பினும் கூகுள் மேப்ஸ் தான் சிறந்து விளங்குகிறது.  இவ்வாறு கூகுள் மேப்ஸ் மிக பிரபலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவை தொடர்ந்து பல்வேறு விதமான தொழில்நுட்பங்களை புகுத்தி சிறப்பம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது.  தற்போது கூகுள் மேப்ஸ் அதன் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக சில சிறப்பம்சங்களை வழங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | இனி எத்தனை சிம் வேணாலும் போட்டுக் கொள்ளலாம்! ஸ்மார்ட்போனில் புதிய புரட்சி!


நீங்கள் சாலை வழியாக நீண்ட தூரத்திற்கு பயணம் செய்யும்பொழுது ஒன்று அல்லது இரண்டு  சுங்கச்சாவடியைக் கடக்க வாய்ப்புகள் நேரிடும்.  சில சமயம் நமக்கு எத்தனை சுங்கச்சாவடிகள் உள்ளது என்பது குறித்த சரியான தகவல் நமக்கு தெரியாது.  சுங்கச்சாவடிகளை எளிமையாக தேர்வு செய்ய உதவும் வகையில், கூகுள் முதல் முறையாக கூகுள் மேப்ஸில் சுங்கச்சாவடி கட்டணங்கள் குறித்த செய்திகளை வெளியிடுகிறது.  இதன்மூலம் வாடிக்கையாளர்கள் பயணத்தை தொடங்குவதிலிருந்து, பயணத்தை நிறைவு செய்யும் வரை சுங்கச்சாவடிகளின் கட்டணம் என்ன என்பதை இதில் பார்க்கமுடியும். அடுத்ததாக கூகுள் மேப்ஸ் பயணத்தின் பொது சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த விரும்பாதவர்களுக்கென்று ஒரு வசதியை வழங்குகிறது.  இதன்மூலம் பயணத்தின் போது எவ்வித கட்டணமும் செலுத்தாமல் பயணத்தை நிறைவு செய்யும் பாதையை கண்டறியலாம்.  வாடிக்கையாளர்கள் டோல் சாலைகள் உள்ள பாதையை காண்பதை முற்றிலுமாக தவிர்ப்பதற்கு இதில் ஆப்ஷன் உள்ளது.  இதனை செய்ய நீங்கள் கூகுள் மேப்பின் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் க்ளிக் செய்து அதில் 'அவாய்ட் டோல்ஸ்' என்பதை தேர்வு செய்தால் போதும்.



மேலும் கூகுள் மேப்ஸ் கூடுதலான சில அம்சங்களையும் அதன் பயனாளர்களுக்கு வழங்குகிறது.  அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தின் டிராஃபிக் விளக்குகள், ஸ்டாப் சைன்ஸ் போன்றவற்றை கண்டறிவதற்கான வசதியை வழங்குகிறது.  இதன்மூலம் பயனர்கள் குறிப்பிட்ட நகரத்தின் டிராஃபிக் லைட், சாலையின் சரியான வடிவமைப்பு, அகலம் முக்கியமாக மீடியன்கள் மற்றும் தீவுகள் போன்றவற்றை கண்டறியலாம்.  மேலும் எந்த நகரத்தை பற்றிய சரியான தகவல் தேவையோ அதனை பெறமுடியும்.  இந்த அம்சமானது இந்தியாவிற்கு வருமா என்பது குறித்த சரியான செய்தியை கூகுள் இன்னும் குறிப்பிடவில்லை, இருப்பினும் இந்த மாசம் இனிவரும் நாட்களில் சில நாடுகளின் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு ஆட்டோ, கார்பிளே  பயனாளர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


கூகுள் மேப்ஸை போலவே ஆப்பிள் மேப்ஸும் சில சிறப்புடன் செயல்படுகிறது.  இது எவ்வித தடையுமின்றி  ஆப்பிள் வாட்சுடன் செயல்படுகிறது.  இதனை போலவே தற்போது, ​​கூகுள் ஆனது கூகுள் மேப்ஸை ஆப்பிள் வாட்சுடன் இணைக்கிறது.  இதன்மூலம் ஆப்பிள் வாட்ச் வைத்திருக்கும் கூகுள் மேப்ஸ் பயனர்கள் விரைவில் அவர்களது வாட்சில் இருந்து திசைகளை கண்டறியலாம்.  ஆப்பிள் வாட்ச்சில் உள்ள கூகுள் மேப்ஸ் ஷார்ட்கட்டைத் க்ளிக் செய்தவுடன் தானாகவே அதில் மேப் ஓபன் ஆகும்.  கூகுள் ஒரு புதிய பின் செய்யப்பட்ட ட்ரிப் விட்ஜெட்டை அறிமுகப்படுத்துகிறது, இதன் மூலம் பயனர்கள் கோ டேப்-ல் பின் செய்து ஐஓஎஸ் ஹோம் ஸ்க்ரீனில் திசைகளை பார்க்கமுடியும், இது நேரத்தையும் எளிதாக்கும் வகையில் அமைந்துள்ளது.  கூகுள் மேப்ஸில் சர்ச் விட்ஜெட்டை சிறியதாக்கி விருப்பப்பட்ட இடங்களை எளிமையாக கண்டறியலாம்,  இந்த வசதி மூலம் பயனர்கள் வருகை நேரம், புறப்படும் இடம் மற்றும் வழிகளை கண்டறிய உதவுகிறது.


மேலும் படிக்க | மாருதி கார் வாங்க திட்டம் இருந்தால் முந்துங்கள்: விலை உயர்வு விரைவில்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR