கூகுள் தொலைபேசியில் அழைப்பாளர் விவரங்களை அறியும் புதிய அம்சம் அறிமுகம்
கூகுள் (Google) இன் இந்த புதிய அம்சமானது பயனாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
கூகுள் தொலைபேசியில் அழைப்பாளர் விவரங்களை அறிந்துகொள்ள ஒரு புதிய அம்சத்தை இணைத்துள்ளது. இதன் மூலம் அழைப்பாளரின் பெயர் மற்றும் எண்ணை ட்ரூகாலர் போல பயனர்களால் முன்கூட்டியே அறிந்துக்கொள்ள முடியும்.
கூகுள் (Google) இன் இந்த புதிய அம்சமானது பயனாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தேவையற்ற அழைப்புகளைத் தவிர்ப்பதற்கும், பாடல்கள், முக்கிய ஒலிநாடாக்களை கேட்டுக்கொண்டிருக்கும்போது வரும் அழைப்புகளை துண்டிப்பதற்கும் அழைப்பாளர் விவரங்களை தெரிவிக்கும் அம்சம் பெரிதும் உதவியாக உள்ளது.
ALSO READ | Google Search: கூகிளில் இவற்றை ஒருபோதும் தேடகூடாது; அதனால் பெரும் இழப்பு ஏற்படலாம்
இந்த அம்சத்தைப் பெற கூகுள் போனில் செட்டிங் காலர் ஐடி (Caller ID) அனெளன்ஸ்மென்ட் பிரிவில் சென்று பெற முடியும். இதில் எப்போதுமே காலர் ஐடிக்களைத் தெரிவிக்க வேண்டும், ஹெட்செட்களை உபயோகிக்கும்போது மட்டும் தெரிவிக்க வேண்டும், காலர் ஐடிக்களைத் தெரிவிக்க வேண்டாம் என மூன்று உள்பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கூகுள் போனில் மட்டுமல்லாது, மற்ற ஆன்டிராய்ட் செல்போன்களிலும் இந்த அம்சம் கூகுள் செயலி மூலம் வழங்கப்படுகிறது. ஆன்டிராய்ட் செல்போன்களில் அவை இயல்புநிலை டயலர்களாகவும் இருக்கின்றன. புதிய அம்சம் பார்வைத் திறன் குறைபாடுடையோருக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR