ஆகஸ்ட் மாதத்தில் இந்தியர்கள் அதிகம் தேடியது குறித்து கூகிள் சில சுவாரஸ்யமான விவரங்களைப் பகிர்ந்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியர்கள் அதிகம் தேடிய வார்த்தை குறித்து கூகிள் (Google) சில சுவாரஸ்யமான நுண்ணறிவுகளைப் பகிர்ந்துள்ளது. இந்த பட்டியலில் சுதந்திர தினத்திற்கான தேடல், பிரணாப் முகர்ஜி மற்றும் கோவிட் -19 ஆகியோர் அடங்குவர்.


இது குறித்து கூகிள் பகிர்ந்துள்ள தகவலின்படி, ஆகஸ்ட் மாதத்தில் “பாகிஸ்தான் Vs இங்கிலாந்து” (Pakistan vs England) என்பது இந்தியாவில் எப்போதையும் விட 5,000% அதிகமாக தேடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி (Pranab Mukherjee) குறித்து எப்போதையும் விட 4,000% க்கும் அதிகமான தேடல்கள் இருந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி குறித்து முன்னெப்போதையும் விட 3,400% க்கும் அதிக தேடல் உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி என்பது இந்திய சுதந்திர தினத்திற்கு அடுத்ததாக இரண்டாவது அதிகம் தேடலுக்கான இடத்தைப் பிடித்தது.


ALSO READ | எந்த கிழமை எந்த நிறத்தில் ஆடை அணிய வேண்டும்... தெரிந்து கொள்ளுங்கள்!!


இது குறித்து கூகிள் கூறுகையில், சுதந்திர தினம் என்பதற்கான தேடல்கள் எப்போதுமே அதிகமாக தான் இருக்கும் ஆனால் இந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கான தேடல் ஆர்வம் ஒரு புதிய சாதனையை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்த தேடல் ஆர்வம் முன்னெப்போதையும் விட 3,750% உயர்ந்துள்ளது. இதுதான் ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் அதிகமாக தேடப்பட்ட ஒன்று. இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 2018 ஆண்டில் இதற்கான தேடல் விகிதம் அதிகமாக இருந்தது.


இது தவிர, லெபனான் நகரில் நடந்த மிக பயங்கர வெடி விபத்தை அடுத்து “லெபனான்” (Lebanon) என்பதற்கான தேடல் ஆர்வமும் இந்த மாதத்தில் முன்னெப்போதையும் விட 2,100% க்கும் மேலாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் “COVID-19 தடுப்பு” (COVID-19prevention) என்பதற்கான தேடல் 1,600% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.


கோவிட்-19_யை பொருத்தவரை, “அமித் ஷா கொரோனா வைரஸ்” (Amit Shah coronavirus) என்பதற்கான தேடல் ஆர்வம் 4,100% க்கும் மேலாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் “கொரோனா சமீபத்திய தடுப்பூசி” (Vaccine for corona latest) என்பதற்கான தேடல் ஆர்வம் 150% க்கும் மேலாக உயர்ந்துள்ளது. சுவாரஸ்யமாக, ஆகஸ்ட் மாதத்திலும் இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கான “தடுப்பூசி” (Vaccine) என்பது அதிகம் தேடப்பட்ட தலைப்பாக இருந்துள்ளது. கூடுதலாக, “ஸ்பூட்னிக்” (Sputnik) மற்றும் “ஸ்பூட்னிக் தடுப்பூசி” (Sputnik vaccine) என்பதற்கான தேடல்கள் ஆக்ஸ்ட் மாதத்தில் முறையே 3,300% மற்றும் 2,750%-க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.