MTNL வழங்கும் அசத்தல் திட்டம்; ரூ.141 விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி
நவம்பரில், டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் விலையை அதிகரித்து பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இப்போது MTNL நிறுவனம் மலிவான விலையில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில், பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் பிரீபெய்டு திட்டங்களின் விலைகளை அதிகரித்தன. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அனைத்தும் தங்களது பிரீபெய்டு திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன.
வாசகர்களை ஈர்க்க தற்போது மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பயனர்களின் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு மலிவான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. பயனர்கள் குறைந்த விலையில் அதிக நன்மைகளைப் பெற விரும்புகிறார்கள் என்பதால், மலிவு விலை திட்டங்கள் அமலபடுத்தப்பட்டன.
இந்நிலையில், 150 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஒரு வருட செல்லுபடியாகும் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த திட்டம் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவை பின்னுக்கு தள்ளியுள்ளது. இது என்ன திட்டம் என்று பார்க்கலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், முழு கணக்கீடு இதோ
MTNL மலிவான திட்டம்
MTNL அதன் மிக அற்புதமான திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் ஆகும். இந்த திட்டம் 141 ரூபாய்க்கு கிடைக்கும். இந்த திட்டத்தில், அதிவேக டேட்டாவுடன் வரம்பற்ற தொலைபேசி அழைப்பின் பலனைப் பெறுவீர்கள்.
MTNL திட்டத்தின் நன்மைகள்
MTNL இன் 141 ரூபாய் திட்டத்தில், 365 நாட்களுக்கான அனைத்து நன்மைகளையும் பெறுவீர்கள். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு கிடைக்கும். இதனுடன், MTNL நெட்வொர்க்கில் அழைப்புகளைச் செய்ய வரம்பற்ற அழைப்பு வசதியும் வழங்கப்படுகிறது.
200 நிமிடங்கள் இலவசம்
MTNL தவிர வேறு எந்த நெட்வொர்க்கிற்கு செய்யும் அழைப்புகளுக்கு, அதற்கென தனியாக 200 நிமிடங்கள் வழங்கப்படும். இந்த நிமிடம் முடிந்ததும், நிமிடத்திற்கு 25 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் 90 நாட்களுக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும். 90 நாட்களுக்குப் பிறகு, நீங்கள் வினாடிக்கு 0.02 பைசா செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | ஆர்பிஐ அதிரடி முடிவு, வட்டி விகிதங்கள் உயர்ந்தன: வீடு, வாகன கடன் இஎம்ஐ அதிகரிக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR