இந்தியாவின் பல மாநிலங்களில் கன்னித்தன்மை சோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது, எனினும் சில மாநிலங்களில் இந்த நடைமுறை வழக்கத்தில் தான் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் பரிதாபம் என்னவென்றால் கன்னித்தன்மை சோதனையில் வெற்றி பெறாத பெண்கள் உடனடியாக குடும்பத்தை விட்டு ஒத்திவைக்கப்படுவதும் வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் வடக்கு கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமாக சில தினங்களிலேயே விவாகரத்து வழக்கை சந்திக்க நேரிட்டுள்ளது.


இந்தியாவின் சில மாநிலங்களில் திருமணமான புதுப் பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனையை கட்டாயப்படுத்தி செய்யப்படுகின்றன. திருமணத்தின் போது மணமகளிடம் கன்னித்தன்மை உள்ளதா என்று பரிசோதனை செய்யச் சொல்வதாகவும், கன்னி தன்மையினை நிரூபிக்காத பெண்களுக்கு திருமணம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிகிறது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் நடைமுறையில் இருந்த இந்த வழக்கத்திற்கு அம்மாநிலம் தடை விதித்துள்ளது.


இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் கன்னித்தன்மை சோதனை தலைதூக்க துவங்கியுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ரக்ஷா(25) என அடையாளம் காணப்பட்டுள்ளார். MBA பட்டதாரியான இவருக்கும், சரத்(29) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைப்பெற்றுள்ளது.


கன்னி தன்மையை நிரூபித்தால் மட்டுமே காவல்துறையில் வேலை!


திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன்பே ரக்ஷாவின் தாயார் உடல்நல குறைவால் இறந்துள்ளார். தன் தாயின் இழப்பை தாங்க இயலாத ரக்ஷா திருமணத்தின்போது கலை இன்றி அமைதியாக காணப்பட்டுள்ளார். இதன் காரணாமக ரக்ஷாவிற்கு திருமணதில் விருப்பம் இல்லை என யூகித்துக்கொண்ட சரத், தனது மனைவிக்கு கன்னித்தன்மை சோதனை மற்றும் தாய்மை தன்மை சோதனை மேற்கொண்டுள்ளார். 


திருமண தினத்தன்று உடல் சோர்வால் மயங்கி விழுந்த ரக்ஷா-வினை, அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். தனது மயக்கத்திற்கு மருத்துவம் பார்க அழைத்து செல்வதாக என்னிய ரக்ஷாவிற்கு மருத்துவர் கன்னிதன்மை சோதனை மேற்கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சந்தேகத்துடன் குடும்பம் நடத்தும் கணவருடன் வாழமுடியாது என என்னிய ரக்ஷா தனது சகோதரியின் வீட்டில் கடந்த 3 மாதங்களாக வசித்து வருகின்றார். இந்நிலையில் தற்போது ரக்ஷாவிற்கு சரத் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது. குடும்பத்தார், மருத்துவர்கள் என பலர் கூறியும் சரத் ரக்ஷா-வை ஏற்க ஒப்புக்கொள்ள வில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.