இந்தோனேஷியா காவல்துறையில் பணியமர இளம்பெண்கள் தங்களது கன்னித்தன்மையினை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?...
இந்தோனேஷியாவின் காவல்துறையின் பெண்கள் பணியமர வேண்டுமெனில் இரண்டு தகுதிகள் முக்கியமாகும்... ஒன்று அவர் அழகாக இருக்க வேண்டும், மற்றொன்று அவர் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும். ஆட்சேர்ப்பு முகாமின் போது இளம்பெண்கள் கன்னித்தன்மை பரிசோதனை எனப்படும் ‘two-finger test’-ல் தேரினால் மட்டுமே பணி கிடைக்கும் என்பது கொடுமையான விஷயம்.
ஜக்கியா என்ற இளம்பெண் இந்தோனேஷிய காவல்துறை ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்று இந்த ‘two-finger test’ தேர்வில் தோல்வியடைந்துள்ளார். தற்காப்பு கலை கலைஞரான ஜாக்கிய இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தால் தான் ஆச்சரியம்... தற்போதைய காலக்கட்டத்தில் ‘two-finger test’ தேர்வில் தேர்வது எளிதான காரியம் அல்ல... இருசங்கர வாகனங்களை இயக்கும் பெண்களால் கூட இந்த தேர்வில் தேர்ச்சி அடைய முடியாது என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜாக்கிய மனித உரிமைகள் ஆணையத்தில் தனது பணி நிராகரிப்பு குறித்து புகார் அளித்துள்ளார். மேலும் இந்த தேர்வில் தன்னை பரிசோத்திவர் முறையான மருத்துவர் அல்ல எனவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இவரது புகாரை அடுத்து இந்த விவகாரம் புதாகரமாக வெடிக்க துவங்கியுள்ளது.
எனினும் இந்தோனேஷியா காவல்துறை தரப்பில் இதுகுறித்து விளக்கம் கேட்கையில்... இந்த மருத்துவ சோதனையானது தேர்வாளர்களுக்கு நோய் ஏதேனும் உள்ளதா என பரிசோதிக்கும் இயல்பான மருத்துவ சோதனை தான் எனவும், கன்னித்தன்மை பரிசோதனையில் வராது எனவும் தெரிவித்துள்ளனர்.