ஜிஎஸ்டி வரி குறைப்பு! இன்று முதல் அமல்! விவரம் உள்ளே!!
88 பொருட்களின் மீது குறைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது.
88 பொருட்களின் மீது குறைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது.
உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு மாற்றாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான, சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை கொண்டு வரப்பட்டது.
இது இந்திய வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக கருதப்படுகிறது. இது தொடர்பான மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நள்ளிரவில் கூட்டம் நடத்தப்பட்டு, அதைத்தொடர்ந்து மறுநாள் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்தது.
மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் 28வது ஜிஎஸ்டி கவுன்சில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 88 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. வரி விலக்கு பெறும் பொருட்கள் மற்றும் வரி குறைப்புக்குள்ளான பொருட்கள் குறித்த ஒரு பட்டியல் இதோ!
ஜிஎஸ்டி வரி விலக்கு பெறும் பொருட்கள்:-
சானிட்டரி நாப்கின்,
தங்கம் வெள்ளி சேர்க்கப்படாத ராக்கி கயிறு.
மார்பிள், துடைப்பத்திற்கு பயன்படுத்தப்படும் அடிப்படை பொருட்கள்
செறிவூட்டிய பால்
சாப்பாடு தட்டு இலை
தேங்காய் நார் உரம்.
12 % இருந்து 5% குறைந்த பொருட்கள்:-
கைத்தறி துணி
போஸ்பிக் ஆசிட்
பூச்சிக்கொல்லி மருந்து
28% இருந்து 18% குறைந்த பொருட்கள்:-
வாஷிங் மெஷின்
பிரிட்ஜ்
ப்ஃரீசர்
68 செ.மீ வரையிலான டிவி
வீடியோ கேம்ஸ்
வேக்குவம் கிளீனர்ஸ்
டிரெய்லர்ஸ் மற்றும் செமி-டிரெய்லர்ஸ்
மிக்ஸி
ஷேவிங் மெஷின்
ஹேர் டிரையர்ஸ்
வாட்டர் கூலர் ஸ்டோரேஜ்ஸ்
வாட்டர் ஹீட்டர்ஸ்
லிதியம் இயோன் பேட்டரிஸ்
எலக்ட்ரிக் இரும்பு
பெயிண்ட்
18% இருந்து 5% குறைந்த பொருட்கள்:-
பெட்ரோல், டீசல் கலப்பதற்காக ஆயில் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும் எத்தனால்
இறக்குமதி செய்யப்படும் யூரியா
இ-புத்தகங்கள்
இந்நிலையில் இந்த புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.