மழையில் நனைந்தால் உடனே இத பண்ணிடுங்க! இல்லை என்றால் முடி உதிர ஆரம்பிக்கும்!
Hair Fall Tips: பொதுவாக மழையில் நனைந்தால் முடி வேகமாக உதிர ஆரம்பிக்கும். மழையில் நனைந்த பிறகு முடியை சரியாக பராமரிக்காததால் இந்த பிரச்சனை அதிகரிக்கிறது.
Hair Fall Tips: தற்போது கடுமையான வெயில் காலம் முடிவடைந்து மழைக்காலம் தொடங்கி உள்ளது. இருப்பினும் ஒருசில இடங்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. மழைக்காலம் வந்தவுடன் அதனுடன் பல நோய்களையும் கொண்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகளுடன் முடி உதிர்தல் மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளும் அதிகரிக்கிறது. மழை காலங்களில் மேகமூட்டமாக வானிலை மற்றும் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பதால் வியர்வை வறண்டு போகாது. இதன் காரணமாக முடி வேகமாக உதிர ஆரம்பிக்கிறது. மேலும் பல நேரங்களில் மழையில் நனைந்தவுடன் முடியை நன்றாக துவட்டாமல் விட்டுவிடுகிறோம். இதனாலும் முடி உதிர்தல் பிரச்சனை அதிகரிக்கிறது.
எனவே, ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப முடியை சரியான முறையில் பராமரிப்பு அவசியாமன ஒன்று. இது முடி உதிர்வை அதிகம் குறைக்க செய்யும். பொதுவாகவே தலையை சுத்தமாக வைத்து கொண்டால் முடி உதிர்வு பிரச்சனை நின்றுவிடும். இதற்கு பல செயற்கை தயாரிப்புகள் இருந்தாலும் இயற்கையான முறையை கையாள்வது சிறந்தது. மழைக்காலத்தில் முடி உதிர்வதைத் தடுக்க தலையில் தொடர்ந்து எண்ணெய் வைப்பது மற்றும் தலையை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். குறிப்பாக மழையில் நனைந்தவுடன் முடி உதிர்வதை தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மழையில் முடி உதிர்வதை தடுப்பது எப்படி?
நீங்கள் மழையில் நனைந்துவிட்டால் உடனே முடியை ஷாம்பு போட்டு அலசவும். ஏனெனில் மழைநீரில் பல இரசாயனங்கள் மற்றும் கார்பன் உள்ளது, இவை முடியை சேதப்படுத்தும். எனவே, மழையில் நனைந்தால் உடனே உங்கள் தலைமுடியை சுத்தமான தண்ணீரில் உடனடியாக ஷாம்பு போட்டு கழுவவும். ஈரமான முடியை வெறுமனே துடைப்பது மட்டும் சரியாகாது, முடிக்கு ஷாம்பு போட்டு கழுவ வேண்டும். அதே போல நீண்ட நேரம் மழையில் நனைந்து இருந்தால் வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி முடிக்கு ஷாம்பு போட்டு குளிக்கவும். இது மழைநீரில் உள்ள மாசு மற்றும் ரசாயனங்களை கழுவி, முடி மற்றும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காது. மேலும் சளி பிடிக்கும் அபாயத்தையும் குறைக்க உதவும்.
மழைக்காலங்களில் முடியில் ஏற்படும் பிசுபிசுப்பு காரணமாக முடி உதிர்தல் பிரச்சனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே மழைக்காலத்தில், முடியை வறண்ட நிலையில் வைத்து கொள்ளுங்கள். தலையில் ஈரப்பதம் காரணமாக முடி உடைந்து, பொடுகு அல்லது பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே, முடியை எப்போதும் ஈரப்பதம் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். மழை மட்டும் குளிர் காலங்களில் சிலர் வியர்வையைத் தவிர்க்க தலைக்கு எண்ணெயைப் பயன்படுத்துவதில்லை. முடிந்தவரை குளிப்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன்பு முடிக்கு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு போட்டு முடியை சுத்தம் செய்தால் வேர்களை வலுவடையச் செய்து முடியை பளபளப்பாக மாற்றும்.
மேலும் மழையில் நனைந்த பின்பு முடிக்கு ஷாம்பு பயன்படுத்தி பிறகு ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். இதனால் உலர்ந்து காணப்படும் முடியை மென்மையாகவும், பட்டுப் போலவும் மாற்ற முடியும். இது முடி உதிர்தல் மற்றும் முடி உடைவதைக் குறைக்கும். வாரம் இருமுறை ஷாம்பு செய்யும் போது கண்டிஷனரை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். அதே சமயம் முடிக்கு ஹீட்டர் போடுவதை தவிர்ப்பது நல்லது.
மேலும் படிக்க | இந்த பழத்தின் இலை ஒன்று போதும், சுகர் லெவல் பட்டுன்னு குறையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ